பூக்களை வெறுப்பதில்லை பட்டாம்பூச்சிகள்
![](https://eluthu.com/images/loading.gif)
மலரை விரும்புது பட்டாம்பூச்சி
மனதை கவருது அதனாலே.....
அழகை விரும்புநீ தமிழாச்சி...
அணைத்து மகிழும் தாய்போலே....!
மென்மை கொண்ட நினைவுகளே
மேன்மை செய்யுது பாரினையே....
வன்மை கொண்ட எண்ணங்கள்...
வலிக்க வைக்குதே மனங்களையே..
முத்தமிழ் உந்தன் மூச்சினிலே
முயன்றால் வருமே பேச்சினிலே
புண்படுத்தா சொற்கள் இயல் தமிழாம்
புன்னகை என்பது இசைத் தமிழாம்
இயல் இசை சேர்ந்தால் நாடகம்தானே
இந்த வாழ்வில் நீ தமிழன் - உண்மைதானே ?!