உலகழகி என் காதலி
கண் சிமிட்டல் ஒன்று....,
கவிதை என்றால், ....
அது நீ சிமிட்டினால் மட்டுமே!
விழி தவம் கிடந்தாலும்
உழியால் செதுக்கமுடியாத
சிற்பம் நீ !
நொடியேனும் இமைக்காமல்
பார்த்து ரசிப்பேன்!
என் கண்ணீருக்கும்
உன்னைக் காண
அவகாசம் கொடுப்பேன்!
உன்னை நுட்பமாய் ரசிக்கவும்,
உன் வெட்கம் ஒரு வாய்ப்பு தந்தது!
பிரம்மனுக்கு லஞ்சம் கொடுத்திருப்பாளோ!
என்று சற்றே யோசிக்க தோன்றுகிறது!
உன்னைக் கண்டது முதல்..!
எத்தனையோ கவிஞர்களால்
வருணிக்கப்பட்ட நிலவைக் கூட!
குறை கூற தோன்றுகிறது.
உன்னைப் பார்த்தது முதல்!
பேரழிகியே! பெருமூச்சி
விட்டு கூறுகிறேன்!
நான் ரசித்த உலகழகி நீ தான்..!
லட்சம் நிலவுகள் வந்தாலும்..
நிச்சியம் உன்னிடம் தோற்க்குமடி
அத்தனை அழகு
நீ மட்டும்...
என் காதலை
எப்படி சொல்வேன்
நான் மட்டும்.......!