விதைத்தவன் எவனோ

விதைத்தவன் எவனோ...?
வினை அறுத்தவள் எவளோ....?
உயிர்கொண்டது தாயின் கருவில்
உடல்கிடந்தது தெருவின் மடியில்..!
பெற்றெடுத்த உனக்கே
எனை பிடிக்கவில்லை என்றால்....
தத்தெடுத்த தெருவில் எனக்கு
தாலாட்டு எப்படி கேட்கும்...!
கொசுவும் எறும்பும் தடுப்பூசி போடு
சின்ன அம்மை பெரிய அம்மை நலமாய் பார்த்து
சிக்கன்குனியாவால் சீர்திருத்தப்பட்ட
ஆரோக்கியச்சிறுவன் நான் இனி
அழுதாலும் பயனில்லை....!
என்மீது எல்லாவறையும் போடுகிறார்கள்
என்னைத்தவிர எல்லாவற்றையும் பொறுக்கிரார்கள்
கசங்கிக்கிடக்கும் காகிதத்தைக் சுமக்கிறார்கள்
வாடிக்கிடக்கும் என்முகத்தை வெறுக்கிறார்கள்...!
உழைத்து உண்ண உடம்பில் இன்னும் வலுவில்லை...
உட்கார்ந்து உணவுண்ண உரிய இடம் கிடைக்கவில்லை....
எச்சில் இலையில் என்வயிறு நிறைகின்றது....
காலத்தின் தாலாட்டில் என்கவலை கரைகின்றது....
உறவுகள் யாருமில்லை உரிமைகொண்டாட.....
உள்ளத்தில் யாருமில்லை நானும் கொண்டாட....
உலகத்தில் யாரும் அநாதை இல்லை....
இரு உயிர்கள் இல்லாமல் எவரும் இல்லை...!