தண்டனை
கலப்படம் பாலில்
கோர்ட் உத்தரவு
கன்றுக்கு
ஆயுள் தண்டனை !
யுத்தம்
பாகிஸ்தானோடு
அன்று
இலங்கையோடு
இன்று !
விடுதலை என்று
செய்தி சொன்னது
தேசியப் பாதுகாப்புச் சட்டம் !
சிதம்பரம்
செய்தது பிரசாரம்
சிதம்பரம் கோவில் !
அக்கரையில் அரசு
அக்கறையாக
ஈழப் பிரச்சினை!