கூடி வாழ்ந்திடு பாப்பா

பிரிக்கக் கற்றிடு
நல்லது கெட்டது
அழகு அன்னப் பறவையிடம் ....!
கூடி வாழக் கற்றிடு
கூட்டைப் பார்த்து
கட்டும் தேனீக்களிடம் ...!
கூடி உண்ணக் கற்றிடு
கூட்டம் பார்த்து
கூடும் காக்கைகளிடம்...!
அழகை ரசிக்கக் கற்றிடு
ஆட்டம் பார்த்து
அழகு மயிலிடம் ...!
பாட்டை ரசிக்கக் கற்றிடு
பாடுவதைப் பார்த்து
கூவும் குயிலிடம்....!
ஒழுங்காய் வாழக் கற்றிடு
சுறுசுறுப்பைப் பார்த்து
வரிசையாய் செல்லும் எறும்புகளிடம் ...!
மகிழ்ச்சியாய் வாழக் கற்றிடு
குறும்பைப் பார்த்து
சிரிக்கும் குழந்தையிடம் ...!