விருதுகள் -2013 பன்வடிவ படைப்பாக்க குரிசில்-2013
அன்பு தோழர்காள்.
வணக்கம்
ஒரு படைப்பாளன் என்பவன் தனது மொழியில் புலமையும் அதன் பல்வேறு நடை கூறுகளில் ஆர்வமும் பெற்றிருத்தல் என்பது அவனது கற்பனையாக்கங்களுக்கு மெருகேற்றும் ஒரு சாந்துப் பூச்சு ஆகும்.
மொழியின் நடை என்பது உயிரின் விரிவாக்கம் போன்றது. பன்முக விரிவுகளை தன்னகத்தே எந்த மொழி உள்வாங்கிக்கொள்கிறதோ அம்மொழி உலக மாந்தர் பலரின் வாழ்வியலுக்குள் ஏதோ ஒரு
அசைவில் உயிர் வாழும்..இச்செயலை செய்ய வல்ல திறன் ஒரு படைப்பாளிக்கே உரியது.
தமிழில் அதன் தொன்ம வடிவங்களுக்கு கூடுதலாக பிற மொழிகளின் வடிவங்களை தன்னுள் உள்வாங்கிகொண்டதால் இன்னமும் பல மண்ணில படைப்பாளிகள் தமிழின் சிறப்பு மெச்சுகிறார்கள்.மொழிபெயர்ப்பு என்பது மட்டும் இன்றி நடையும் இங்கு முக்கியமானது.
ஜப்பானிய மொழி நடை ,,,உருது மொழி நடை சிலி மொழி நடை ஆங்கில மொழி நடை என பன்மொழி நடைகளிலும் படைப்பாக்கம் செய்ய ஒரு படைப்பாளன் முன் வருதல் வேண்டும்.இது ஆய்வு ரீதியாக இருந்தாலும் சரியே.பழக பழக மொழி கைவசப்படும் இலகு கொண்டது.
நடப்பு தமிழ் உலகில் பன்முக நடைப் படைப்பாளி என எனது ஞானத்தந்தை திகழ்கிறார் எனில் அது மிகையில்லை. தமிழ் நடைகள் பலவும் பிற மண்ணில நடைகளான கஜல், ஹைக்கூ, சென்ரியு, லிமரிக்கூ,வினாவகை நடை ...என அவரது நடை பரிணாம வளர்ச்சி இன்னும் தொடர்ந்துக் கொண்டேதான் உள்ளது .தனது 80 அகவையிலும் இன்னும் படிக்கிறார்...படைக்கிறார்...
இளம் படைப்பாளிகள் பன்முக நடை படைப்பாக்கங்களில் ஒரு முயற்சி செய்தாக வேண்டும்.தொடக்கத்தில் முழு இலக்கண சாயம் பூசிக்கொள்ளாத படைப்பு என்றாலும் காலப் போக்கில் அது கைக்கூடுமே..!இந்த ஹைக்கூ என்பது தளத்தில் பலரின் கைகளில் சிக்கித் தவிப்பதை நான் அவதானித்து வருகிறேன்.அதேப போலவே கஜலும் லிமரிகூவும் சென்ட்ரிக்களும்....இருப்பினும் சற்றேறக்குறைய நடை இலக்கணத்தின் விழுமியங்களை பரந்த அளவில் உள்வாங்கி பன் வடிவ படைப்புகளை தளத்தில் ஒருவர் அளித்து வருகிறார் பாராட்டுக்குரியவர் அத்தோழர்.ஒரு விருதுக்கும் உரியவர் !!
அவர் 2014ஆம் ஆண்டின் முதல் விருதாக "பன்வடிவ படைப்பாக்க குரிசில்-2013 " எனும் விருதினைப் பெறுகிறார்.
யார் அவர் ???
****************************************************************************
2013ஆம் ஆண்டின்,
$$$$$ "பன்வடிவ படைப்பாக்க குரிசில்-2013 " $$$$
எனும் விருது
@@@ தோழர் கே.எஸ்.கலைஞானகுமாருக்கு @@ அளிக்கப்படுகிறது.
***************************************************************************
வாருங்கள் ...வாழ்த்துவோம் அவரை..!!!