ஆறாம் பருவம் தான் ஆறாம் அறிவு
மொழி பேசிடும் அழகு
உதட்டுப் பூக்களுக்குத் தெரியும்
நம் தாய் மொழியை ...!
கிள்ளை பேசிடும் அழகு
இகரமோ?உகரமோ?
தெரியாமல் எங்களிடம் ....!
மழலை பேசிடும் மொழியாக
அகல விரித்திடுதே தன்
செவ்விதழ்களை...!
அண்ணாந்து பார்க்குதே
சைகை மொழியில்?
புதுப் புது இடங்களின்
பெயர் கேட்டு...!
செங்காந் தளில்பதித்த
விரல்களை நீட்டி கேட்குதே
சைகை மொழியில்....!
பொக்கை இதழ்களை
விரித்து நீ பேசுவது
என்ன மொழி என்று ...!
உயிரோ?மெய்யோ?
ஆங்கிலமோ??தமிழோ?
என்று...!
எந்த இலக்கணமோ ?
எந்த இலக்கியமோ?என்
மொழி புரியாமல் ...மழலைக்கும்...!
கடையில்....
நகைத்துச் சிரித்து
'ங்கா'' ''ம்மா ''என்று
புரியாத மொழியைப்
புரியாமல் அழைக்குதே...!
அதைவிடப் பேரானந்தம்
எந்த ஊரில் கிடைக்கும்?
எந்த அன்பில் நிலைக்கும்?
தீராத கவலைகள்
அனைத்தும் தீர்ந்ததே..
''என் கண்மணியே'' என்று
வாரி அணைத்தேனே..!
தேனே! கற்கண்டே!
பிங்கியே!மயிலே! என்று ...!