அவள் ஒரு அழகிய தமிழ் மகள் எனது முந்தைய கவிதைக்கு வந்த கருத்தும் - அதன் பதிலும் உங்கள் ரசனைக்காகவும் - அதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்காகவும்

saro 18-Dec-2013 9:40 am
ஹரி நாம கவிதையில்
இறை கட்சி அருமை ! பெருமை .
saro 18-Dec-2013 10:17 am
இறை காட்சி என்று திருத்தம் .
HARI HARA NARAYANAN.V 18-Dec-2013 11:15 am
தன்னைத் திருத்தும்
தன்மை அறிந்தேன்....தோழி நீ
தமிழில் திருந்திய நெறியைக் கண்டு.!
தமிழச்சி நின் கருத்து - இக்கவி
தலையிலே கிரீடமம்மா...!
பிளாஸ்திரி போட்டால்
அடிபட்ட தமிழுக்கு வலிக்குமென
தமிழ் மருத்துவம் செய்தது போல்
காட்சி என்று எழுதி வைத்தாய் ...!
நின் கருத்திலே காட்சி தந்த தமிழ்
முதல் கருத்தில்
ஆ
ரோ
க
ன
ம்
இரண்டாவது கருத்தில்
ம்
ன
க
ரோ
வ
அ
மொத்தத்தில் மோகனம்....! நன்றி...!
அன்புடன் ஹரி