விண்ணப்பம்
இணையத் தள நிலத்தில்
இயன்றவரை விதைத்துவிட்டேன்.-என்னால்
விதைக்கப்பட்ட (க)விதைகளை இணையதளம்
வளர்க்குமா? தளர்க்குமா?
எருவாக எண்ணங்களை
கருவாக சுமந்து விதைத்து வருகின்றேன்.
எத்தனையோ விதைகளின் வளர்ச்சியில்
என் எண்ணங்களின் விதைகள் வளர்வதே இல்லை.
இணையத்தள கருத்தாளிகளே'
இணையத்தள பார்வையாளர்களே
இணையத்தளத் தேர்வாளர்களே.
என்னால் இணையத்தளத்தில் தூவப்படுகின்ற
எருவும்,கருவும் ஒவ்வொன்றும்
எதார்த்தங்களின் உண்மைகள். - இந்த
உண்மைகள் இணையத்தளத்தில்
ஊமையாகவே வீழ்ந்துக்கிடக்கின்றன.
ஊக்கங்கள் இல்லாததால் ஊனமாகிவருகின்றன.
விதைப்பது விளைச்சலுக்காக.
விண்ணப்பிக்கின்றேன்.
வீதியில் வீசி எறியப்பட்ட பூவாக - என்
விதைகளை பார்க்காதீர்கள். - சில
விஷயங்களும் எந்நாளும் விவரிக்கப்படலாம்.
விடைப் பகருங்கள். - இணையத்தளத்தில்
உவமைகளும், எதுகையும், மோனையும்
உருப்பெறவும் வழிக்காட்டுங்கள்.