விருதுகள்-2013 சொல்லாக்க செம்மல்-2013
வணக்கம் தோழர்களே...
படைப்பாளி எவருக்கும் ஓர் அடையாளம் உண்டு.
அது வரிகளிலோ கையாளும் நடையிலோ கைக்கொள்ளும் பாடுபொருளிளோ வெளி வரும். இது தவிர்க்க இயலாதது...ஒரு சொல் கூட அடையாளம் காட்டி விடும் வல்லமை பெற்றது.
ஆனால் அங்கீகாரம் என்பது எளிதில் கிட்டுவதில்லை. பல நிலை பாதிப்புகளை அளிக்கும் ஒரு படைப்பே அங்கீகாரம் பெறும். இந்த அங்கீகாரத்தின் ஓர் அடையாளமே விருதுகள்...சமயங்களில் அங்கீகாரங்கள் காலங்கடந்தும் வருவதுண்டு. ஒரு பாரதிதாசனுக்கு சாகித்திய அகாதெமி விருது அவருக்கு மிகவும் காலங்கடந்தே அளிக்கப்பட்டது.கலத்தோடு அளிக்கப் படும் விருதுகள் ஒரு படைப்பாளனுக்கு கிடைக்கும் ஊக்க மருந்து அம்மட்டே....
இவ்வகையில் ஒரு கவிஞனுக்கு அங்கீகாரம் அளிக்க வல்லவை பன் பாடுபொருள் தெரிவு , நடை ,பிறகு சொல் அலங்காரம் ...ஒரு படைப்புக்கு சொற்கட்டு அழகுக்கு அழகு சேர்க்க வல்லது... சொற்களின் அடுக்கு அடுக்குகளின் அமைப்பு கவிதையின் உயிர் நாடி.எவ்வகை கவிதையாயினும் சரி.இந்த சொற்கட்டு என்பது படிமங்களின் பிறப்பாக மாறுவதும் உண்டு....
இவ்வகையில் தளத்தில் படைப்புகள் அளித்து வரும் பலர் மத்தியில் சொற்சுவை மிக்க படைப்புகள் அளிக்க வல்ல இருவர் 2014ஆம் ஆண்டின் முதல் விருதாக "சொல்லாக்க செம்மல்-2013" எனும் விருதினைப் பெறுகிறார்கள்...
யார் அவர்கள்...??
*************************************************************************
தோழர்கள்
@@@@@@@@ ரோஷான் எ.ஜிப்ரி @@@@@@@
@@@@@@@@ சிந்தா மத்தார் @@@@@@@@@
2013 ஆம் ஆண்டின்
$$$$$$$ "சொல்லாக்க செம்மல்-2013" $$$$$$$$$$
எனும் விருது பெறுகின்றனர்.
**************************************************************************
வாழ்த்துவோம் வாருங்கள்...