கணினியின் ஆசை

உலகத்தின் பரப்பை அறிந்தேன்...
உன்னதமான மனிதனின் உழைப்பை பறித்தேன்...

கடல் மீனின் எண்ணிக்கையை அறிந்தேன்...
எண்ணற்ற மக்களின் வாழ்க்கையைப் பறித்தேன்...

தொலை தூரத்தில் உள்ள நண்பர்களை பேச வைத்தேன்...
பக்கத்திலுள்ள நண்பனின் பாசத்தை இழிவுபடுத்தினேன்...

இவ்வளவும் செய்த நான்
விவசாகியாக பிறக்க ஆசை...
ஒவ்வொரு நொடியும் வியர்வையை
சிந்தி உழைக்க....

எழுதியவர் : மதுராதேவி (19-Dec-13, 6:35 pm)
Tanglish : kaniniyin aasai
பார்வை : 86

மேலே