ஆசிட் பெண்

பெண்ணே !
காதல் உன்னை ஏமாற்றி விட்டது
காதலன் வந்த பின்பு !
அழகை ரசித்த காதலன்
உன் முகத்தை
அசிங்கமாக்கினான் !
உன் மீது வைத்த
காதல் தான் என்னவோ !
அவனை பித்து
பிடிக்கவைத்தது !
ஊர் முன்னிலையில்
மணமேடையில் கைகோர்த்து
மனைவியாகும் நேரத்தில் !
உன் முகங்களும்
உன் உடலும்
கருகி தான் போனது என்னவோ !
உன் காதலனோ
காதலை நினைக்காமல்
சென்றுவிட்டான் சிறைக்கு !
காதல் உங்களை ஏமாற்றியதா !
இல்லை
நீங்கள் தான்
காதலை
ஏமாற்றிநேரா !

எழுதியவர் : lakshmi (19-Dec-13, 6:53 pm)
சேர்த்தது : lakshmi777
பார்வை : 122

மேலே