கூலாங்கற்க்களே
ஏ.. கூலாங்கற்க்களே..
அந்த
ஓடைகளின் ஓரமாய்
கூடி விளையாடி.. ஓய்ந்திருங்கள்..
கடல்
அலைகளின்
கரைகள் தொட்டு
முக்தி அடைந்துவிடலாம்..
என்று எண்ணி
உருண்டு கரைந்துவரும்
தவம் மட்டும் செய்துவிடாதீர்கள்..
நீங்கள்
சுமந்து வரும்
கீதங்களின் ஈரம்..
அந்த
காற்றினில்
கரையும் முன்பே..
மண்வெட்டிகளின் வெட்டு பட்டு
கலவைகளுக்குள் சிக்கிக் கட்டுண்டு..
கட்டிட
சுவர்களுக்குள்
சமாதி ஆகிவிடுவீர்கள்..
கானல்
அலைகளை கூட
காண முடியாத வண்ணம்..
பல
வண்ணங்கள் பூசி
மறைத்து விடுவார்கள் உன்னை..