குழந்தை வரம்

மாலதி மௌனமாக அமர்திருந்தாள்.....

அசோக் வாழ்கையே வெறுத்து சுருண்டு கிடந்தான் .....

அசோகின் அம்மா " ஐயோ ! என் வம்சமே அழிந்து விட்டதே !" கதறினார்

மாலதி எழுந்தாள் , அசோகின் மெடிக்கல் ரிப்போர்ட் எடுத்து வீசினாள்.அசோகின் அருகில் சென்று " விடுங்க .நமக்கு குழந்த வேண்டாங்க ....உங்களுக்கு ந குழந்தை எனக்கு நீங்கன்னு ..................."அழுதாள்.

"என்னால ஏத்துக்கவே முடியல மாலதி , எனக்கு போய் இப்படி ஒரு குறையா...செத்துடலாம் போல இருக்கு" அசோக் குமுறினான் .

மாலதி அவனை அணைத்து ஆறுதல் கூறினாள்"வேணுனா .நாம ஒரு குழந்தைய தத்து எடுத்துக்கலாம் .இத ஒரு குறையா நினைக்காதிங்க ....."

அசோக் கின் அம்மா " மாலதியை கண்டு நெகிழ்தாள்.நீ எனக்கு மருமகளை கிடைக்க குடுத்து வச்சிருக்கணும் ...உன்ன போய் ...................."

போன் அடித்தது ......." ஹலோ ! அசோக் ! நா டாக்டர் பேசறேன் .சாரி ! உங்க ரிப்போர்ட் மாறிடுச்சு ! உங்களுக்கு எந்த குறையும் இல்லை .....உங்க மனைவிக்கு தான் .................தவறுக்கு வருந்துகிறேன் "

அசோக் முகத்தில் சிரிப்பு துளிர் விட்டது .........
அவன் தாய்க்கும் தான் .....மாலதி அதிர்ந்தாள் .......

ஒரு வாரம் கடந்தது ,,,,,,,,,,,,,,,,,,,மாலதி குறையா சொல்ல கோவிலுக்கு சென்று வீடு திரும்பினாள்......

வீட்டில் மாமியார் அசோகிடம் "ஏம்பா அசோக் ! உனக்கு தான் குறை இல்லை...அப்புறம் ஏன்டா இன்னும் காத்திட்டு இருக்க ...அந்த குறை இருக்கற சிரிக்கிய தலை முழுகு டா....நா உனக்கு நல்ல பொண்ணா பாக்கறேன் "

உடனே அசோகின் குரல் " நானும் அத தான் நினைச்சேன் .........கொஞ்ச நாள் போகட்டும் .நா மெதுவா மாலதிகிட்ட எதாவது பிரச்சனை பண்ணி விவாகரத்துக்கு வழி செய்யறேன் "

மாலதி இடி விழுந்தவளாய் அமர்ந்தாள் " அசோக் ! நமக்கிடையில் இருந்த காதல் எங்கே ? உன் ஆண்மையை நிரூபிக்க ..........உன் வம்சம் தழைக்க ....உன் தாய் ஆசையை நிறைவேற்ற ..............செத்து விட்டதோ ?" தனக்குள்ளே குமுறினாள் ......

"எனக்கு குறை " என கத்தி அழ தொடங்கினாள் ......

அருகில் உள்ள கோவிலில் ஒலித்த பாடல் ."குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா .....குறை ஒன்றும் இல்லை ...கண்ணா ...." அவளுக்கு ஆறுதல் அளிக்க அவளை விட கத்தி ஒலித்தது .........

எழுதியவர் : ஸ்ரீமதி வடிவேலன் (20-Dec-13, 1:31 pm)
பார்வை : 137

மேலே