கவிப்பெண்ணை ஏன் மறந்தாய்
செத்தனையோ நெஞ்சே
சாக்காட்டை அடைந்தனையோ?
சாவிலும் உடன்வருமுன்
கவிப்பெண்ணை மறந்தனையோ?
எத்தனையோ திங்களை
மறதியில் கழித்தனை!
ஏனின்னும் உறக்கம்
எழுந்திடத் தயக்கம்?
முத்தனைய அவள்சிரிப்பை
மறந்தனையோ நானறியேன்.
முழுநிலவு அவளென்று
மொழிந்தனையே நீயன்று
முத்தமிழ்ப் பெண்ணைநீ
மறந்ததேன் இத்தனைநாள்?
மெய்க்காதல் உண்டென்றால்
மறதியுனைச் சேருமோ?