ஜாதி இல்லை

இல்லை இல்லை இங்கு ஜாதி இல்லை..
ஜாதி சான்றிதல் இல்லையென்றால்...
பள்ளியில் இடம் இல்லை....!

இல்லை இல்லை இங்கு ஜாதி இல்லை..
மக்கள் தொகை கணக்கெடுப்பில் கூட...
ஜாதி இல்லாதவன் பெயர் இல்லை...!

இல்லை இல்லை இங்கு ஜாதி இல்லை..
ஜாதி இல்லாத கட்சிகளே
இங்கு ஜெய்கவும் இல்லை..!

இல்லை இல்லை இங்கு ஜாதி இல்லை..
ஜாதி தெரியாதவனுக்கு..
இலவசங்களும் சலுகைகளும்..
இங்கு இல்லை..!

இல்லை இல்லை இங்கு ஜாதி இல்லை..
ஜாதி பெயர் தெரியாதவன் தான்..
இங்கு பெரும் தொல்லை...!

எழுதியவர் : ஜெகன் (21-Dec-13, 2:11 pm)
Tanglish : jathi illai
பார்வை : 429

மேலே