பாசமான என் தங்கை

பாசமான என் தங்கை ....!!!
செங்கதிரோனின்நிறத்தை உடையவளோ
கொடி போன்ற உருவம் உடையவளோ
வானின் குளிர்நிலா முகம் உடையவளோ
பிறை போன்ற நுதலை உடையவளோ
மின்னும் துடியிடை எழில் உடையவளோ
காலைத் தொடுகின்ற கூந்தல் உடையவளோ
துயரை துடைத்திடும் குவளைக் கண்களை உடையவளோ
மயில் அன்ன நடை உடையவளோ
கூவும் குயில் அன்ன குரல் உடையவளோ
நடமாடும் சிற்பம் போல் இருப்பவளோ
மான் போல் மருட்சி அடைபவளோ
சீறும் வேங்கை போல் சீறுபவளோ
கனிவாக கருத்துக்களை பகிற்பவளோ
கடும் புயலாக காட்சி அளிப்பவளோ
எப்படி இருப்பாய் என் தங்கையே ???