வெண்மை

இரட்டை வடை சங்கிலியும் வைரக்கல்
ஒட்டியாணமும் போதாதென்று - தன் மகளை
தங்கத்தால் இழைபார்!
தாம்பூலத்தில் ஏந்துவார்!!
ரத்தினமும் ரொக்கமும்
ரதத்தை அலங்கரிக்க - அறிவிலிகள்
தங்கத்தின் தூய்மைதனை
அளந்து சரிப்பார்க்கும்!
தலைநிமிர்ந்து நடந்தவன் - தரைப்பார்ப்பான்!
காரிகையின் கால்விரலில் கழல் சேர்ப்பான்!
கண்ணே மணியே என்பான்!
காதல் மழையை பொழிவான்!
இல்லறத்தின் இனிமைகளில் - இருவரும்
இன்புற லயித்திருக்க
நல்லறம் புகுத்த நாத்தனார் வருவாள்
உன்னத வாழ்வை கொஞ்சம் உரசி பார்ப்பாள்!
உற்றவன் துணையை அவளிழப்பாள்
தனிமையை துணையென ஆக்கிடுவாள்!!
கள்ளமில்லா கணவனிவன் - கயவருடன்
சுடுசொல் சந்தேகமென
நித்தம் நித்தம் நொந்துபோனாள்!
பிறன் மனை நோக்கா ஆண்மை அவனிலன்!
அதையறிந்த பெண்மை வெகுண்டாள் !
சிலையென இருந்தவள் சீறுகொண்டாள்
விலைமகளை நீ தேட - விருந்தினி உனக்கென்ன ?
பெண்ணிற்கு தாலி போல் - ஆணிற்கும்
உண்டோ வேலி ?
ஒழுக்கமுற நீ இருந்தால் ஒன்றாய் இருந்திருப்பேன்
விலகிவிடத்தனால் - வெண்ணிறம் அணிந்தேன்! விதவையானேன்!

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (21-Dec-13, 8:51 pm)
பார்வை : 191

மேலே