உயிர் தாங்கி நிற்கின்றோம்

ஏந்தி நிற்கும் இந்த கைகள்
வாங்கும் பொருளைத் தாங்கிடுமா?

தூங்கிப் போகும் விழி இரண்டும்
விழிப்பது என்பது பெரும் கனவா?

வாங்கி வந்த வரம் என்ன
வாழும் பொழுதே சாகும் உடலா?

சீண்டிப் பார்க்கும் எம தர்மன்
சாட்டை பட்ட கோடுகளா?

சார்ந்தவர் எல்லாம் சென்றது போக
எஞ்சிய உயிராய் நிற்கின்றோம்..

பார்ப்பவர் எல்லாம் பரிதாபிக்கும்
பொருளாய் மாறி நிற்கின்றோம்..

தண்ணீர் இன்றி வாடும் நாவு
தவிக்கும் தவிப்பு தெரிகிறதா?

செந்நீர் இல்லா சிறு இதயம்
கண்ணீர் கொண்டு வாழ்ந்திடுமா?

எழுதியவர் : வெ கண்ணன் (22-Dec-13, 8:05 am)
பார்வை : 127

மேலே