அவள்

இந்திர லோகத்தில் வாழும் காரிகையோ - மாலை
அந்தி நேர வானில் தோன்றும் தூரிகையோ!!!!!
சந்திரன் தேய்ந்தாலும் என்னுள்ளே ஒளிரும் வளர்பிறையோ- எந்தன்
எந்திர வாழ்வில் என்றும் மறையாத தமிழ் மறையோ!!!!
மந்திர மயக்கமென்ன! அது உன் புன்னகையோ- என்
தந்திரக் காதலால் பூமி கொண்ட வான்மழையோ!!!!
சுதந்திரநாட்டில் கைதியாய வைப்பது உந்தன்
விழிச்சிறையோ- இந்தச்
சுந்தரனால் முகம் சிவக்கும் நீலத்தாமரையோ!!!