விருதுகள்-2013 “அறிவியல் பரப்பு பா புனை ஏந்தல்-2013”

அன்புடை தோழர்களே

வணக்கம் ...
2013ஆம் ஆண்டின் தளத்தின் பல்வகை படைப்புகள் அளித்துவரும் நமது தோழமை நெஞ்சங்களைப் பாராட்டி விருதளித்து ஒரு வகை ஊக்கப்படுத்தும் செயல்பாடு பலருக்கும் உவகையை அளித்துள்ளது குறித்து தனிவிடுகைகள் ,அலை பேசி உசாவல்கள் என தங்கள் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்..."கதை இன்னும் முடியவில்லை என " சிலரிடம் நான் அப்போது கூறியிருந்தேன்...சில நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்ததால் இப்போது தொடர்கிறேன்...

...பலவித முயற்சிகள் தளத்தில் அரங்கேறின...மூன்று படைப்பாளிகள் இணைந்து ஒரே தலைப்பில் எழுதுவது...பாதி படைப்பின் பின்னோட்டமாக தொடர்வது...அளிக்கப் படும் தலைப்புகளில் படைப்புகள் அளித்தல்...பொங்கல் விழா கவிதைப் போட்டி .... (வலைதள வரலாற்றில் முதன்முறையாக.... (சன் டி.வி பாணியில் இதை சொல்லி பார்க்கணும்...!! )பலரும் ஒன்றிணைந்து ஒரு தொகுப்பு வெளிக்கொணர்ந்தது......நிறைவாக 2012ஆம் ஆண்டின் விருதுகள் அளிப்பு ...இதோ இவ்வாண்டும் தொடர்கிறது...

அன்பானவர்களே தளத்தின் படைப்பாளிகளுள் அறிவியல் பதங்களை பாடு பொருளாக்கி படைப்புகள் அளித்த தோழர் வினோத்கண்ணன் 2014 ஆம் ஆண்டின் முதல் விருதாக “அறிவியல் பரப்பு பா புனை ஏந்தல்-2013”எனும் விருது பெறுகின்றார்...

****************************************************************************

தோழர் வினொத்கன்ணன் (இரட்டை வரிக்கோடு )

“அறிவியல் பரப்பு பா புனை ஏந்தல்-2013”

எனும் விருது பெறுகின்றார்...

****************************************************************************
வாழ்த்துவோம் வாருங்கள்

எழுதியவர் : அகன் (22-Dec-13, 5:38 pm)
பார்வை : 124

மேலே