ஆம் ஆத்மி ஆட்சிக்கு வாழ்த்துக்கள்
எதைத் தின்றால் பித்தம் தெளியும் ? என்ற நிலையில் இருந்த மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி ஒரு ஆபத் பாந்தவனாக தெரிந்திருக்கிறது என்பதைத் தான் நடந்து முடிந்த டெல்லி மாநிலத் தேர்தல் காட்டியிருக்கிறது.இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான முழுமையாக ஆதரிக்காமல் குரங்கு பங்கு பிரித்த கதையாக அல்லவா செய்து விட்டார்கள்.இதனால் இப்போது ஆட்சியில் அமர நீ போ! என்று பி.ஜே.பி யும் ,நீ போ என்று ஆம் ஆத்மியும் அடுத்தவரை துரத்தும் நிலையை உருவாக்கி விட்டார்கள்.
இப்போது என்ன நடக்கிறது? எந்த காங்கிரெஸ் கட்சி ஊழல் கட்சி என்று கூறி மக்களின் வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றதோ ,அதே கட்சியினரின் ஆதரவுடன் ஆம் ஆத மி ஆட்சியமைக்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது.
எப்படியோ ,ஆட்சி அமைத்து டெல்லியை நல்லாட்சி செய்தால் சரிதான்.எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள பி.ஜே.பி அதற்கு விடுவார்களா என்பதுவும் சந்தேகமே.
எனினும் புதிதாக ஆட்சி அமைக்கப் போகும் ஆம் ஆத்மி கட்சிக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்!
இனி வரும் காலங்களிலாவது மக்கள் யாரையேனும் ஆதரிப்பது என்று முடிவெடுத்தால் அவர்களை முழுமையாக ஆதரித்தால் நன்றாக இருக்கும்.