சமூகத்தின் பார்வை
ஓர் ஆண்
தவறினால்
ஆண் சமூகம்
பழிக்கப்படுகிறது
ஒரு பெண்
தவறினால்
பெண் சமூகம்
பழிக்கப்படுகிறது
ஓர் இனம்,
ஒரு நபர் தவறினால்
அந்த இனம்
பழிக்கப்படுகிறது
ஒரு கட்சி
ஒரு வேட்பாளர் தவறினால்
அக்கட்சி
பழிக்கப்படுகிறது
ஒரு தவறு நடந்தால்
மொத்தமாக
அச்சமூகத்தை பழிப்பதேன்
சமூகம் எல்லாவற்றையும்
சமூகமாகவே பார்க்கிறதே
அதனால்தான்
இதற்கு சமூகம் என்ற பெயரோ !!!!!
எதற்கும்
இரண்டு பக்கங்கள் உண்டு
எல்லாவற்றிலும்
நன்மையையும் உண்டு
தீமையும் உண்டு
நன்மையை அணைத்து
தீமையை தீக்கிரையாக்குவோமே .....