காணி நிலம் வேண்டும்

நொண்டிச் சிந்து

காணி நிலம் வேண்டும் - பராசக்தி
கட்டிடங்கள் இட்டு விற்பதற் கில்லை
தேனியைப் போல நிதம் - உழைத்து
தெள்ளு நெற்கதிர் விளைப்பதற்கே !

மானிட ஜாதிப்பசி - நீங்கி
மடமை பொறாமை அழிவதற்கே !
தானியம் மன்னுதற்கே - சக்தி
தாயே வேண்டுதும் காணி நிலம் !!

தட்டிப் பறித்தலில்லா - நிலத்தைத்
தாசில் தாரவர் முன்னிலையில்
பட்டாப் போட்டுநீ தா - பராசக்தி
பாரதத் தேவியின் கைகளிலே !

கட்டிபொன் செய்திடுவோம் - எங்கும்
கனிவகை கொஞ்சிடச் செய்திடுவோம் !
சட்டங்கள் வேதமெல்லாம் - யாரும்
சமமெனச் சொல்லிட ஆண்டிடுவோம் !

எழுதியவர் : விவேக்பாரதி (23-Dec-13, 4:58 pm)
பார்வை : 307

மேலே