இது பால்ஸ் அல்ல - உண்மைச் சம்பவம்
கவி எழுத, கரு தேடினேன்
கார் மேகம் சூழ்ந்தது இதய வானில்....!
கொட்டிய கவி மழையில் எனக்கு எழுது
கோலென கைப்பிடியில் மலை அருவி....
எழுதியது எழுதியது நதி வரிகள்......
எழுத எழுத வளருது வளருது ரசனைப் பயிர்கள்...
பூத்துக் காய்க்கும் கனிகளாய் நமை
பூரிக்க வைக்குதே செந்தமிழே.....! என்று நான்
கனவுகள் காண வரம் தந்தாய் - அதனால்
கடவுளே உனக்கு THANK YOU என்றேன்...!
கண் துயில முகத்தில் மூடிய இங்கிலீஷ் பேப்பர்
கலராய் காட்டிய அப்படத்தால் இக்கவிதை....!!