கவிஞர்களுக்கு சமர்ப்பணம்
எண்ணத்தின் உச்ச நிலை
எல்லை இல்லா
வான் அளக்கும்
கவிதை சுவை பெருக
எண் இல்லா
வாய் பிளக்கும்
அடி அளவு
ஆழம் (அர்த்தம்) சேர்க்கும்
சொப்பனங்கள்
சொர்கம் தாங்கும்
கற்பனைகள்
காவியம் வாங்கும்
வார்த்தைகள் வைத்து
வண்ணம் தீட்டும்
வரிகள் ஆக்கி
வானவில் காட்டும்
கொண்ட வஞ்சம் (வஞ்சபுகழ்ச்சி)
வான் புகழும்
பொய் கூற
போதை எழும்
கையறுக (கையறு நிலை பாட / எழுதாமல் இருக்க)
கற்கள் அழும்
மெய் உணர்த்தும்
போதி மரம்
முடி அரசும்
சாய்க்கும் சிரம்
தமிழ் அழகு
கவி ஆரம்
கவிக் கழகு
புகழ் பாரம்