நீ தாயானபின் என் தாரம் தேடுவேன் காதல் தோல்வி இல்லை 555
என் உயிரே...
நீயும் நானும் சேர்ந்து வாழ
நம் மனம் என்னியது...
நீயும் அவரும் சேர்ந்து வாழ
விதி என்னியது...
நாம் நேசித்த போதே
உறுதி எடுதோமடி...
நம் பெற்றோர்களின் சம்மதத்துடன் கரம்பிடிபோமென...
என் வீட்டில்
சம்மதம் சொல்லி...
உன் வீட்டில்
சம்மதம் இல்லையடி...
நெஞ்சில் வலியும்
குறையவில்லையடி...
ஒரு விழியில்
கண்ணீரும்...
ஒரு விழியில்
புன்னகையும்...
வாழ்க்கை
நமக்கு வேண்டாமடி...
உனக்கு அமையும்
இந்த வாழ்கையை...
வசந்தமாக்கி
கொள்ளடி கண்ணே...
உன் பெற்றோரின் ஆசையை
நிறைவேற்றுவோம்...
கண்ணே எப்போதாவது
நாம் சந்தித்து கொள்ள...
தொலைவில்
இல்லையடி...
பலமுறை சந்திக்கும்
தொலைவிலே நாம்...
உன்னை நான்
காணும் போதெல்லாம்...
உன் விழிகளிலும்
உன் இதழ்களிலும்...
புன்னகையை காண
வேண்டுமடி...
அழகே நீ தாயானபின்
என் தாரம் தேடுவேனடி...
நீ சிரித்து வாழ்ந்தால்
நம் காதல் வாழும்...
என் திருமணதிற்கு
நீ வர வேண்டும்...
உன் குடும்பத்துடன்
என்னை வாழ்த்தி செல்ல...
நீ சிரித்து வாழும் வாழ்வை
நான் காணவேண்டும்...
நான் சிரித்து
வாழும் வாழ்வை...
நீ காண வேண்டும்...
நாம் சிரித்து வாழும்
நம் வாழ்வில்...
நம் அழகிய
காதல் வாழுமடி...
என்றும் காதலுடன்
உன்னவன்...
உன் பிரியமானவன்.....