தியாகம்-5,

பாரதி முதல் வருட ஆரம்பத்தில் மிக்கவும் மகிழ்ச்சியுடனே கல்லூரியில் வலம் வந்தாள்., ஓய்வு நேரத்தை கழிப்பதற்காக தினமும் கல்லூரியில் இருக்கும் நூலகத்திற்கு செல்வது பாரதியின் வழக்கம்.,தமிழில் மிகவும் ஈடுபாடு அதிகம்.,எனவே எந்த புத்தகம் கிடைத்தாலும் வாசித்து விடுவாள், அதிகமாக கவிங்கர்களின் படைப்புகள், வாழ்க்கை தத்துவங்களை விரும்பி படிப்பாள்.,
அன்று, ஒருநாள் நூலகத்தில் "காதலின் கவித்துவம்" என்ற புத்தகத்தை வாசித்து கொண்டிருந்தாள்.,அதில் காதலின் ஆழத்தையும், புனிதத்தையும் பற்றி விளக்கி இருந்தார்கள்., அந்த புத்தகத்திலே அவள் தன்னை மறந்து விட்டாள்., காதலுக்கு இவ்வளவு மகத்துவம் உண்டா! என்று கூட நினைத்து கொண்டாள்.,
புத்தகத்தில் லயித்து இருக்கும் போது., ஒரு குரல் "ஹலோ" என்றது.,இவள் தன்னை மறந்து படித்து கொண்டிருந்த நாளோ என்னவோ பதிலளிக்கவில்லை.,மறுபடியும் "ஹலோ".,., பதிலில்லை.,சொடக்கு போட்டு "ஹலோ" என்றான்.,அப்பொழுது தான் அவளுக்கு நினைவு வந்தவளாய்.,
"சொல்லுங்கள்,என்ன வேண்டும்?" என்றாள்., அப்படி கேட்டு கொண்டே.,அவன் கண்களை மட்டும் சில நிமிடங்கள் லயிக்காமல் பார்த்தாள்., அவன் பார்வை என்னவோ செய்தது., "ஹலோ,இது என் புத்தகம்.நான் மறந்து இங்கயே வைத்து விட்டேன்., கொஞ்சம் கொடுங்களேன் என்றான்.,
என்னது,உங்களது புத்தகமா?அப்பொழுது நூலகத்தில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் உங்களுடையதா?என்று கிண்டல் செய்தாள்., என்ன காமெடி பண்ணியதாக நினைப்பாக்கும்., ஹலோ, முதல் பக்கம் பாருங்கள், "மதன்" என்று என் பெயர் இருக்கும் என்றான்.,
முன்பக்கம் சென்றாள்.,"மு.மதன்" என்றும், முதுகலை பட்டப்படிப்பு முதல்வருடம் என்றும் இருந்தது., "ஓஃஃஃ,சாரி" என்றாள்., அதெல்லாம் ஒன்றும் இல்லை, நூலகத்தில் வைத்தால் அனைவரும் படிக்கத்தானே செய்வார்கள் என்றான்., புத்தகம் கைமாறியது., நன்றி என்று
கூறி விட்டு.,அவள் கண்களை ஒருமுறை ஆழமாக பார்த்து சென்றான்..,
அன்று முழுவதும்,அவன் கண்கள் மறுபடியும் மறுபடியும் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது.,ஏன்.?இந்த பார்வை என்னை ஏனோ செய்கிறது?என்ன ஆனது எனக்கு?இது தான் ஈர்ப்பா.,சீ., அவன் யார்,என்ன என்று கூட தெரியவில்லை,அதற்குள் ஈர்ப்பா.,? என்று தனக்குள்ளே பிதற்றி கொண்டாள்.,
ஆனால்,இந்த ஈர்ப்பு தான் பின்னாளில் காதலாக மாறும்,காவியம் படைக்கும் என்று இவளுக்கு தெரியாது.,
ஈர்ப்பு காதலாக மாறியது எப்படி.,?

சொல்வோம்.,அடுத்த தியாகத்தில்.....................,!

எழுதியவர் : elakkiyam (24-Dec-13, 1:21 pm)
சேர்த்தது : ooviyan
பார்வை : 150

மேலே