பாவம் செய்யாதே

பசிக்கும்போதே உணவுகொடு
பயிர் வாடும் முன்னே தண்ணீர் உற்று

உன்னை உயர்த்த ஏணியாய் இருந்தவரை
எட்டி உதைக்காதே

உழைப்பை போற்று ஊக்கம் கொடு
பாவம் செயாதே

அகக்கண்னை மறைக்கும் தலைக்கனத்தை
இன்றே அழித்துவிடு

எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே
தாழ்தோரின் நிலைக்காக குரல் கொடு

உன்னை உலகம் போற்றும்
உயர்ந்த இடத்தில வைத்து துதிபாடும்

பாவம் செயாதே

கோவை உதயன்

எழுதியவர் : (24-Dec-13, 4:53 pm)
சேர்த்தது : UDAYAKUMAR.v
Tanglish : paavam seiyathe
பார்வை : 117

மேலே