முதல் காதல் பயணம்

இரவை கண்டால்
மலரும் அள்ளி போல்
கதிரவனை கண்டால்
மலரும் தாமரை போல்
உன்னை கண்டவுடன்
மலர்ந்தது என்னுள் காதல்....
காற்று தீண்ட
எழும்பும் அலையாய்
அலை தீண்ட
கரையும் கரையாய்
உன் பார்வை தீண்ட
கரைந்து எழும்பியது
என்னுள் காதல்....
பூக்களை தேடும் வண்டாய்
உன் புன்னகை தேடி
தொலைந்தது இதயம்....
மனது இறக்கை கட்டி
பறந்தாலும் உன்னுள்
சிறைபட்டது ஏனோ
என்னை அறியாமல்....
உன் பாத சுவடுகளை சுற்றியே
என் பாத சுவடுகள் வலம்வந்தது
உன்னை பின்தொடர்ந்தே
வட்டமிட்டது எனது கடிகார முட்கள்....
உதடுகள் பேசாத மொழிகள்
கண்கள் பேச
காதலின் முதல் நிலை அறிந்தேன்
காரணமில்லாமல் நான் சிரிக்கையில்....
பறிபோனது என் இதயம்
பரிசாய் கிடைத்தது உன் இதயம்....
புதிதாய் ஓர் உலகம்
நமக்காய் பிறக்க அதில்
காதல் கொண்டு நிரப்பினேன் காற்றை
நாம் காதல் உயிர் வாழ....
இளமை திருவிழா நம்மில்
இனி இதமாய் தொடங்கும் காதலால்
இனிதாய் புதிதாய் தொடங்கட்டும்
நம் காதல் பயணம்....