காதலியே என்னை வதைக்காதே
என் காதல் புரிந்தது உனக்கு
என் காதலை ஏற்றாய் சுகம்தான் எனக்கு.....
ஆனாலும் காதலியே காதலில்
முழுமையடைய என்னால் முடியவில்லை
கரணம் நீ தான்....
என் காதலை சொல்லிவிட்டேன்
நீ காதலை ஏற்று கொண்டாய்
நான் காதலிக்கிறோம்
உலகறிந்த உண்மை....
ஆனாலும் காதலியே
ஒவ்வொரு முறையும்
உன்னிடம் கேட்டுதான்
வாங்கவேண்டியுள்ளது உன்
காதலையும் பாசத்தையும்.....
என் காதலை சொல்லி சொல்லி
புரியவைத்தேன்
அதனால்தானோ இன்றளவும்
எனக்காக நான் சொல்லி சொல்லிதான்
நீ எல்லாம் செய்துகொண்டிருகிறாய்
என்று நான் சொல்லாமல் செய்யபோகிறாய்.....
காதலை கற்றுகொடுத்தேன்
காதலிக்கவுமா கற்றுகொடுக்க வேண்டும்.....
நானும் சராசரி மனிதன்தான்
என்னுள் உனக்காய் சில ஆசைகளை
சேமித்துள்ளேன் அதை உன்னால் மட்டுமே
நிறைவேற்ற முடியும்....
நீ கேட்காமலே உனக்கு
எல்லாம் செய்கிறேன் ஆனால்
நான் கேட்டும் சிலவற்றை
நீ செய்யாத போதுதான்
காதலியே காதல் வலியினை உணர்கிறேன்....
காதலில் வென்றவர் கோடி
காதலில் தோற்றவர் கோடி
காதலில் வென்றும் தினம் தினம்
காதலில் தோற்பவன் நானாகிறேன்
உன்னால் காதலியே....
தாயிருந்தும்
தாயின் அன்புக்காக அழும்
சிறு குழந்தை போல்
தினம் உன் அன்பிற்காய் என் மனது
அழுது புலம்புவதை நீ
வேடிக்கை பார்த்துதான் கொண்டிருக்கிறாயா..??...
நேற்று பிறந்த குழந்தைக்கெல்லாம்
உன் முத்தத்தை பரிசளித்துவிட்டாய்
கேட்காமலே-நானோ ஏங்குகிறேன்
என்னை நீ உனது முதல் குழந்தை என்பாயே
இந்த குழந்தைக்கு முத்தம் கிடையாதா..??..
பொய்யாக தலைவலி என்று
நான் சொல்லியபோது
பதறியடித்து கேட்பாயே என்னடா பண்ணுதுன்னு
ஒவ்வொரு முறையும் பொய் சொல்லித்தான்
பெறுகிறேன் உன் அக்கறையோடு பாசத்தை.....
அலைபேசியில் மணிகணக்கில் பேசும்
காதலர்கள் அதிகம்
ஆனால் நீ அப்புறம் அப்புறம்
என்று மட்டுமே பேசும் போது
என்னுள் வற்றிவிடுகிறது வார்த்தைகள்
என்று நீபேச நான் கேட்கபோகிறேன்....
நான் அனுப்பினால்தான்
நீ அனுப்புவியா குறுஞ்செய்தி
நான் அனுப்பினால்தான்
நீ அனுப்புவியா மின் தகவல்
நான் கேட்டால்தான்
நீ கேட்பியா சாப்டியா என்று
நான் கேட்டால்தான்
நீ கேட்பியா நலமா என்று..??....
வலிக்கிறது காதலியே
கேட்டு கேட்டு காதல் பிச்சை வாங்க....
உன் பிறந்த நாளுக்கு
உனக்கு surprise அ பரிசு அனுப்பினேன்
ஆயிரம் முத்தம் பரிசளித்தாய் மகிழ்ந்தேன்
ஆனால் என் பிறந்த நாளுக்கு
உன்னிடமிருந்து ஏதாவது வருமென்று
எதிர்பார்த்து ஏமாந்தபோதுத்தான்
வெறுத்தேன் என் பிறந்தேன் என்று...
நட்புக்காய் நேரம் ஒதுக்குகிறாய்
குடும்பதுக்காய் நேரம் ஒதுக்குகிறாய்
எனக்காக நேரம் எப்போது ஒதுக்கபோய்கிறாய்
சிறிது நேரம் போதும்
அதைத்தான் பெரிதும் எதிர்பார்கிறேன்.....
உன்னை பார்க்க வந்து தூரமாய் நின்று
உன்னை வேடிக்கை மட்டுமே
பார்க்க என்னால் முடியவில்லை
அதற்காக அருகில் வந்து கட்டியணைக்க வேண்டாம்
உன் நிழலினை என் நிழலோடு தொட்டுவிட்டுபோ
மறுமுறை வருவேன் மகிழ்ச்சியோடு.....
அழும் போதும் கண்ணீரை துடைக்கும்
உன் விரல்களை விட
அழுவதற்கு முன்னரே அறைவனைத்துகொள்ளும்
உன் கைகளைத்தான் அதிகம் காதலிக்கிறேன்....
புரியுதா காதலியே என் காதல்…?..
என் மனதையும் புரிந்துகொள் காதலியே
உனக்கு புரியும்வரை காதலில் வென்றும்
காதலில் தோற்றவனாய் உன்னால் நான்....