உன் கையே உனக்கு உதவி

தகிக்கும் வெயிலிலே
கொந்தளிக்கும் மனதுடன்
தணியாத கோபத்துடன்
வீறு கொண்டு எழுந்தான்



சாடினான் தீங்கு இழைத்தவர்களை
வாழ வும் மாட்டீர்கள் நிறைவுடன்
வாழ விட மாட்டீ ர்கள் நல்வழியில்
ஆவேசமுடன் பேசி கலங்கினான்


கேட்டவர்கள் நியாயத்தை உணர்ந்தார்கள்
அவன் மீது இரக்கம் கொண்டார்கள்
பிற எதுவும் செய்ய முடியாமல் நின்றார்கள்
அவன் பாட்டை அவனே மேற்பார்க்க வேண்டிய சூழ்நிலை.


இது தான் உலகம் பொதுவாக என்று கொள்
இன்னல் என்ற பொது யாரும் துணை வர மாட்டார்கள்
ஆதரவை கனவிலும் நினனக்காதே
உன் கை உனக்கு உதவி என்று கொள்.


பாடம் கண்டு மிரளாதே மகனே
புரிந்து செயல் படு தங்கமே
நின்று நிதானமாக வாழ கற்றுக் கொள்
இதுவே நிறைவான வழி என் கண்ணே.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (24-Dec-13, 6:06 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 1261

மேலே