கடவுள் இருக்காரா இல்லையா

இது ஒரு குட்டிக் கதை:.கடவுள் பத்தின கதை. கடவுள் இருக்காரா? இல்லையா ? னு ஒரு சின்ன பயனுக்கு வந்த சந்தேகம். தீர்ந்துச்சா தீரலயா? இந்த கேள்விகளோட பதில் தான் இந்த கதை..
===============================================
ரகு ஆறு வயசு பையன். அவனுக்கு கடவுள் நம்பிக்க இல்ல. அவன் ஒவ்வொரு
கிறிஸ்துமஸ்-க்கும் அவனோட பெரியம்மா. வீட்டுக்கு போவான். அங்க தான் அவன் கிறிஸ்துமஸ்
கொண்டாடுவான் அது தான் அவன் சொந்த ஊரும் கூட..
===============================================
கடவுள் யாருன்னு பல கேள்விகள் அவனோட மனசுல.. ஆனா அதுக்கு பதில் கிடைக்குல. கிறிஸ்துமஸ்-க்கு வழக்கம் போல பெரியம்மா வீட்டுக்கு போனான் அங்க அவுங்க பெரியம்மா கிறிஸ்துமஸ் கேக் வாங்கி வச்சுருந்தாங்க அவுங்க சொன்னாங்க இன்னைக்கு கடவுளுக்கு பிறந்த நாள் அவர் இந்த கேக் சாப்டாதான் நாம சாப்டனும்னு சொல்லிடாங்க..
===============================================
கடவுள் எப்படியும் வர மாட்டாருன்னு அவனுக்கு தெரியும்.. கேக் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.. எங்க கேக் கிடைக்காம போயிருமோன்னு. நைட் எல்லாரும் கோவிலுக்கு போன நேரத்துல இவன் கேக் கொஞ்சம் சாப்பிட்டு வச்சுட்டான் .. அவுங்க வீட்ல உள்ளவுங்க வந்து பாத்தாங்க. கேக் கடவுள் தான் சாப்டாருன்னு நினைச்சு அவுங்க எல்லாரும் பங்கு வச்சு சாப்டாங்க ரகு சிரிசிட்டே கேக் வாங்கி சாப்டான்.
==============================================
அடுத்த வருஷம் அதே மாதிரி கிறிஸ்துமஸ் வந்துச்சு இவனும் கேக் சாப்டான் அவுங்களும் கடவுள் சாப்டாருனு சாப்டாங்க அதே மாதிரியே ஒவ்வொரு வருசமும் நடந்துச்சு..

============================================
அவனுக்கு பத்து வயசாச்சு வழக்கம் போல கிறிஸ்துமஸ்-க்கு பெரியம்மா வீட்டுக்கு போனான்..
அங்க அவுங்க பெரியம்மா -ட்ட கேட்டான் கடவுள் இருக்காரா? இல்லையானு.பெரியம்மா சொன்னாங்க கடவுள் இருக்காரு உனக்கென்ன சந்தேகம்னு.. எப்படி சொல்றீங்கனு ரகு கேட்டான் நம்ம வீட்டுக்கு கேக் சாப்பிட வருவாருல ஒவ்வொரு வருசமும் உனக்கு தான் தெரியுமேன்னு சொன்னாங்க.. ரகு சிருச்சுகிட்டே இத்தன வருஷம் கேக் சாப்டது நான் தான் இப்போ சொல்லுங்க கடவுள் இருக்காரா இல்லையானு கேட்டேன்... பெரியம்மா இப்பவும் இருக்காரு கடவுளா ஒவ்வொரு வீட்டுக்கும் வரமாட்டாரு.. யார் உருவத்துலையாவது வருவாரு.. ஒவ்வொரு வருசமும் உன் உருவத்துல நம்ம வீட்டுக்கு வந்துருக்காருன்னு சொன்னாங்க ... இவனுக்கு உடம்பு புல்லரிச்சு போச்சு. அப்போ நான் தான் கடுவுளா அப்படின்னு யோசிச்சுட்டே போயிட்டான் ..
==============================================
அடுத்த வருஷம் ஆச்சு. கிறிஸ்துமஸ் வந்துச்சு இவனுக்கு சந்தேகம் போல.. இந்த தடவ கேக் சாப்பிட கூடாதுன்னு முடிவு பண்ணுனான் அதே மாதிரி சாப்பிடல .. ஆனா கேக் வழக்கம் போல கொஞ்சம் காலி அகிருந்துச்சு.. இவனுக்கு ஆச்சிரியமா இருந்துச்சு .. உடனே அவுங்க பெரியம்மா கிட்ட போய் கேட்டான். நான் தான கடவுள் சொன்னீங்க நா சாப்பிடல அந்த கேக் எப்படி காலி ஆச்சுன்னு கேட்டான்..
============================================
பெரியம்மா சொன்னாங்க.. நீ தான் கடவுள்னு எப்போ நீ நினைச்சியோ அப்பவே நீ கடவுள் இல்ல.
அவரும் உன் கூட இல்ல -னு.. அப்போ யார் தான் கடவுள் எப்படி கேக் காலி ஆச்சுன்னு சந்தேகம் கூடிச்சு.
============================================
அடுத்த கிறிஸ்துமஸ் இவன் கேக் பக்கத்துல ஒளிஞ்சுகிட்டான் . யார் சாபிட்டானு பாக்குறதுக்கு..
எப்படியும் கடவுள பாத்துடலாம்னு ... அங்க பாத்த அவனுக்கு ஆச்சிரியம்.. அங்க அவன் தம்பி கேக் சாப்டான்.. ஒவ்வொரு தடவையும் இவன் சாப்பிட்ட பிறகு அவன் தம்பியும் சாபிட்டுருக்காணு தெரிஞ்சுகிட்டான் நாம சாபிடலனாலும் கேக் காலி ஆயிருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டான்... இப்போ அவனுக்கு சந்தேகம் போயிடுச்சு.. கடவுள் யாருன்னு தெரிஞ்சுக்கிடான்.....

============================================
"இப்போ நீங்க சொல்லுங்க கடவுள் இருக்காரா ? இல்லையா ? நம்பலாமா? வேணாமா?"

=============================================

எழுதியவர் : ஜெகன் (25-Dec-13, 11:42 am)
பார்வை : 1033

மேலே