பணம் படைத்த ஏழை
![](https://eluthu.com/images/loading.gif)
ஐஸ் கிரீமில் செய்த போண்டா இந்த
அழகைப்போல் உலகில் உண்டா...?
தூங்கி முழிச்சா அணு குண்டா
அட கத்துவானே புட்டிப் பால் கொண்டா...!
அவன் வயசு ஒண்ணா ரெண்டா ?
அதுகூட தெரியாம சுத்துறேனே நானும் மண்டா...!
அடுத்த பிளைட்டுக்கு நேரமாச்சி
அப்புறம் பார்க்கலாம் அம்மா வாரேண்டா...!!
வேலைக்கார தெய்வம் வளர்க்கும்
விளையாட்டு பிள்ளை அவன்......!
பெத்த அம்மா அப்பா ரொம்ப பிசி
பெட்டி நிறைய பணத்தை தேடி......!
கலர் காயிதத்தை தொட்டுத் தொட்டே-அவர் உன்
கன்னங்களின் மென்மை காண்பர்...!
தொப்புள் கொடியும் கனமென்றே
தூக்கிப் போட்டார் உனைப் பெற்று......
தூங்கு தூங்கு மலர்ச் செண்டு - நீ
தூர வைத்தே செண்டிமெண்டு.....!!
தூக்கி வளர்க்க நானும் உண்டு -
தூயவனே கண்ணுறங்கு....!