கர்த்தன்
வெளிச்சம் காட்ட வந்த நீர்,
அழுத்தமாய் சொன்னதென்ன?
உயிர் உக்கிரமாய் வதைக்கப்பட்டாலும்,
விழி சிந்தும் நீர்த்துளிகள்,
பிறருக்காய் இருக்கட்டும் என்பதா?
வல்லூறுகள் வட்டமிட்டு,
உமது அங்கம் சிதைக்கையில்,
புன்னகையை படரவிட்டது,
மற்றையோன் காயப்படுத்தினாலும்,
சேதப்படுவது நீயாய் இரு என்றா?
மனிதனாய் ஜனித்து,
சிலுவையில் உயரம்போனது,
உயரவேண்டியது தியாகம் என்றுணர்த்தவா?
வாழ்ந்து வதைபட்டுத்தான்,
தோன்றிய கடனை அடைகவேண்டுமா?
ஐயனே உணர்ந்து உன்னை சரணடைய,
மனிதம் போதுமே மதங்கள் எதற்கு?