நினைவு துடிப்பு
உன் அன்பு நதியானால்
உயிரை கரைத்து விடுகிறேன் !
உன் இதயம் கடலானால்
நானே மூழ்கி விடுகிறேன் !
என் கற்பனைகளை அர்ப்பணம்
செய்திருப்பது உன் காலடியில்தான் !
ஆசை அலைகள் அடித்துக்
கொண்டேயிருக்கின்றன ஆறுதல் கரையில் !
திரும்பவும் திரும்பிவரும் அலையாய்....
உன் வரவை நினைத்து வாழ்கிறேன் !
நினைவில் ஒரு ஓரத்தில் கேட்டு
இதய துடிப்பாய் உன் பெயரை
உச்சரித்துக் கொண்டேயிருக்கிறேன் ....
உன் வரவு காதல் வரவாகட்டும் ..........