இறைவன் படைப்பு வரமாகும்
வீதி வழி நடக்கையிலே
பட்டுப் பாதம் நோகுமென்று
இலையுதிர்ந்து மெத்தை போடும் ....!!
வெயில் வாட்டி வியர்க்கையிலே
கரை நிற்கும் விருட்சங்களும்
குடைவிரித்து நிழல் கொடுக்கும் ....!!
கரம் கோர்த்து போகையிலே
நாணத்தால் முகஞ் சிவக்க
மஞ்சள்வெயில் படம் பிடிக்கும் ....!!
இயற்கை எழிலை ரசித்தபடி
இணைந்த கரங்கள் உலவுகையில்
உள்ளம் உவகை பூப்பூக்கும் .....!!
வண்ண வண்ண நிறத்தழகில்
இதயம் வனப்பின் வசமாகும்
இறைவன் படைப்பு வரமாகும் .....!!!