போராட்ட ஓட்டம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஓடிய ஓட்டமும் ஓய்ந்தது
வாடிய முகமும் தெளிவு பெற்றது
அல்லல் பட்ட உள்ளமும் அமைதி கொண்டது
ஓட்ட பந்தய வெற்றியாளரின் வெற்றி !
நீ ஓடி கொண்டிருக்கும் ஓட்டமும்,
உன் வாடிய முகமும், அல்லல் படும் உள்ளமும்,
அமைதியும், தெளிவும் கொண்டு வெற்றி பெறும்,
அது வரை கலங்காது, உன் போராட்ட ஓட்டத்தை ,
தொடர்ந்திடு மனமே !