எழுதிடு என்னை

கவிதை ஒன்றை வரைந்தேன்
எழுதுகோல் மோட்சமடைய வேண்டுமென்று !

அதற்கு வலிக்கவில்லையாம்
எழுதுகோல் முறையிட்டது என்னிடம் ..!

என் கரங்களைத் தழுவும்போது
கண்ணீரில் ''மை '' விழிகள் எழுத்தாறாய்..!

தன் வரலாறு எழுதச் சொன்னது ..
என் கவிதைகளின் கேள்வியாம் !

எழுதச் சொன்னது காகிதம்
தன் வலிகளையும்
அதன் வேதனைகளையும் ...!

ஆம்..! ஏன்? என்றேன்
எழுதுகோலை விடுத்து ..!

எம்மோடு கலந்ததுவே
உம் வாழ்க்கையும் வரலாறாய் என்று..!

அறுபட்டு அரைபட்டத்
தேக மரங்களின் வழி வந்ததில்
அரசும் ஆலும் வேலுமாய்
நீயும் நானும்தானே !

விழித்துக் கொள்!
இனியாவது...
எம் க(வி)தைகளையும்
உம் க(வி)தைகளோடு
சமர்ப்பணம் செய்துவிடு.. என்று...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (26-Dec-13, 4:23 pm)
பார்வை : 363

மேலே