காதலோடு ஒரு பார்வை
கன்னத்தில் குறையவில்லை சிரிப்பு
எண்ணத்தில் குறையிருந்தால் முறைப்பு
மௌனத்தின் பார்வையில் தவிப்பு
மௌன கீதங்களோடு ஒரு ஈர்ப்பு
உன்னோடு பேச மட்டும் துடிக்கின்றது
கண்ணோடு கண்ணில் காதல் அசைகின்றது
மண்ணோடு திரிந்தாலும் மனசு பறக்கின்றது
நம்மோடு ஒரு காதல் வளர்கின்றது
தூக்கங்கள் இருந்தாலும்
கண்கள் மூடவில்லை
கனவுகள் வந்தாலும்
உன்னை நினைக்க மறக்கவில்லை
விழி இருக்கிறது
உன்னக்காக மட்டும் திறந்து வைக்கிறேன்
வழி இருக்கிறது
காதலுக்காக மட்டும் பாதை வக்குகிறேன்
நல்ல காதல் என்றும் மறையாது
நல்ல காதலர்கள் என்றும் நினைவை இழக்காது
நல்ல வார்த்தைகள் காதலை கவியாக்குகிறது
நல்ல பார்வைகள் காதலை அழகாக்குகிறது