பன்னீரில் குளித்ததுவோ

பஞ்ச வர்ணமேயுன் .............................?
பஞ்சுப் போன்ற பாதம் கண்டு ,
நெஞ்சதுவும் துடிக்குதடி !
வஞ்சியுந்தன் ரதமதனை ,
கெஞ்சி நிதம் கேட்குதடி !
எஞ்சி வரும் இரவுகளும் ,
மிஞ்சிடவே செய்யுதடி!

ராப்பொழுதும் தீராதா?
ரவியதுவும் உதிக்காதா?
ரதியவளின் ரதமதனை ,
ரசித்திட நான் மாட்டேனோ?
ரணப்பொழுதாய் கழிகிறதென்,
ராத்திரியின் உறக்கமதும்!

பன்னீரில் குளித்ததுவோ?
பால்குடமாய்த் தெரிகிறதோ?
பார்வையது விலக்காமல்,
பருக்கைதனும் உண்ணாமல்,
பசியுடனே அலைகின்றேன்,
பதமதனை அடைந்திடவே!

விழிகளுன்னைத் தேடுதடி,
விடியலில் நான் வந்திடுவேன் !
விடியுமுன்னே வந்திடுவாய் ,
விளக்கொளியில் காத்திருப்பேன்!
விடியலை நான் நேர்ந்திடுவேன் ,
விடியாமல் போவதற்கு !


.....................என் நிஜ கதாநாயகிக்கு .........!
.....................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (27-Dec-13, 10:04 am)
பார்வை : 233

மேலே