பார்வையை வைத்தே பூக்களை பறித்துபதமாய் தொடுத்து இதமாய் ரசித்து

வண்ணத்துப் பூச்சியே மோதி விடாதே - அவள்
கன்னத்து மென்மை தாங்காது...! என்
எண்ணத்தில் அச்சமும் வந்தது பெண்ணே நீ
எச்சிலீரம் இதழ்களை ஆக்காதே....!
சுவை மொட்டுக்கள் அப் பூச்சிக்கு
சுகமாய் அனைத்து கால்களடியிலாம்...அது
சும்மா சும்மா பூக்களில் அமர்ந்தால்
சுருக்கென்றெ உன் உதடுகள் வலிக்குமடி....
சுந்தரியே.....ஐயஹோ....நான் என்ன செய்வேன் ?!
பின்குறிப்பு :-
===========
( சுந்தரி யாருன்னுல்லாம் கேட்கப்புடாது.....
கவித சொன்னா ரசிக்கணும்.....
அம்புட்டுதான் ஓங்க வேல.....புரியுதா ?!)