பிரிவு முடிவல்ல

வழக்கமான வாழ்க்கைதாங்க நானும் தேர்ந்தெடுத்தேன். என்ன அது வழக்கமான வாழ்க்கைன்னு கேக்குறிங்களா சராசரியா பலரோட வீட்ல மட்டும் இல்லேங்க இந்த நாட்டுலையும் நடக்குறது " பொண்ணுக்கு வீட்ல பாக்குற பையன கல்யாணம் பண்ணி வெச்சிட்டு அதுல நம்மளோட கடமை முடிஞ்சிடுச்சின்னு நெனைக்கிற பெத்தவங்களோட சராசரியான வாழ்க்கையைத்தான் சொல்றேன் "
என்னோட பெயர் பானு என்னோட அப்பா தொழில் அதிபர் என்னோட அம்மா அவங்க தான் என்ன பாத்துகிறவங்க அது தாங்க " House wife " எங்க வீட்லயும் வழக்கம் போல ஒரு பையன பாத்து பேசி எனக்கும் பிடிச்சிருந்ததனால உடனே கல்யாணமும் பண்ணி வெச்சாங்க ..
அப்புறம் என்ன வழக்கம் போலதான் அவருக்கும் எனக்கும் ஒன்னுக்கு ரெண்டா ஒரு விஷயமும் ஒத்து வரல..என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல வழக்கம் போலதான் நாங்களும் ஒரு வக்கீல் office படி ஏற வேண்டியதா போச்சு...
Divorce apply பண்ணியாச்சு ....
வீட்டுக்கும் வந்தாச்சு ....
அப்புறம் என்ன நான் எங்க வீட்டுக்கு வந்தாச்சு ...
என்னடா ரொம்ப fast ஆ இருக்கேன்னு பாக்குறிங்களா இப்பெல்லாம் எல்லா முடிவுகளும் fast அ எடுக்குறது தாங்க நல்லதுன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள ...
நான் வீட்டு மாடில இருந்து தெருவபாத்தே
ஒரு பொண்ணு தன்னோட கண்ணு தெரியாத கணவன் கைய பிடிச்சிகிட்டு ஒருத்தர் பக்கத்துல ஒருத்தரா ரோட்ல கூட்டிகிட்டு போனா அப்போ எதிருல வந்த bike அவளோட கணவன் மேல இடிச்சிட்டு போச்சு அப்போ அந்த கணவன் அந்த பொண்ண பாத்து
" கொஞ்ச தள்ளி நடம்மா மத்தவங்களுக்கு இடஞ்சலா இருக்கு" என்றான் ..
அதற்க்கு அந்த பெண் " இல்லங்க இந்த பக்கம் கடைங்க எல்லாம் இருக்கு இன்னும் கொஞ்ச தள்ளி போனா அவங்க வெச்சிருக்கிற பொருள் மேல கால் படும்" என்றால்
அப்போது கணவன் "எம்மா எனக்கு தான் கண்ணு தெரியாது ஆனா உனக்கு கண்ணு தெரியுமில்ல நான் ஏன் உன் பின்னாடியே வரக்கூடாது" என்றான் அதற்கு அந்த பெண் " இல்லைங்க உங்கள follow பண்ணிதான் என் வாழ்க்கைன்னு உங்ககிட்ட என்னோட வாழ்க்கைய ஒப்படைச்ச ஆனா கடவுள் உங்க கண்ணை பரிச்சிகிட்டான் அதுக்காக நான் உங்க கண்ணா மாறணும்னு தான் ஆசைப்படுகிறேன் உங்கள் முன்னாள் செல்ல ஆசைப்படவில்லை" .....என்றால் ....
அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது செல்வத்தில் மிக பெரிய செல்வம் நம்மை கடவுள் ஆரோக்யத்துடன் படைத்தது ஆனால் நாம் ஒருவர் மீது ஒருவர் குறையை சொல்லி இல்லாத ஊனத்தை நாமே தேடி செல்கிறோம் ....
சரிதான் ஆண் என்ன சொன்னாலும் அதன் படி நடக்க வேண்டிய கட்டாயம் இல்லை..
ஆனால் " அவனுக்கு ஏன் நாம் அதை செய்ய மறுக்கிறோம் என்பதை எடுத்து சொன்னால் அதை கண்டிப்பாக புரிந்து கொள்வான் ஆனால் நம்மால் முடிகிறதா" .
காரணம் ...
எடுத்து சொல்ல நேரக்மில்லை ..
இறங்கிவர மனமும் இல்லை ....
புறப்பட்டு செல்கிறேன் அவனை தேடி வாழப்போகிறேன் அவனோடு ...
வாழ்க்கை படகில் பயணம் செய்யபோகிறேன் அவன் குணத்தோடு ...
மாற்றப்போகிறேன் அவனை ..
இல்லை மாறப்போகிறேன் நான் ...
மறப்போம் மன்னிப்போம் என்பதே வாழ்க்கை ..
சிரிப்போம் பின் பிரிந்து போவோம் என்பதல்ல வாழ்க்கை...
பிரிவு முடிவல்ல ..
வாழ்க்கை சிறிதல்ல ...
மற்றவர்களுக்காக வாழ்வதே வாழ்க்கை ..
உனக்காகவே நீ வாழ்ந்தால் என்ன பயன்..