ஊனம் என்பது உடலில் இல்லை மனதில்தான்

ஒரு கிராமத்தில் சிவனியன் வீடு இருந்தது.சிவனியன் ஏழை குடும்பத்தை சார்ந்தவன். அவனுக்கு 4 பெண் குழந்தைகள் இருந்தது . மனைவி இறந்து விட்டால் . இந்த குழந்தைகளை சிவனியன் தான் பார்த்துகொண்டிருந்தான். முதல் பெண் ஒரு மாற்று திறனாளி (கால் ஊனம் )(தேவி ) மற்ற 3 பெண்களும் சின்ன பிள்ளைகள் .

தேவிக்கு நிறைய மாப்பிளை வீட்டினர் பார்த்தும் ஒன்றும் அமையவில்லை . எல்லாரும் கால் சரியில்லை , அல்லது நிறைய பணம் வேண்டும் என்று கேட்பார்கள். தேவிக்கும் வயதும் 30 ஆகிவிட்டது .
மற்றவர்களை போல் திருமணம் முடிந்து , பிள்ளைகள் பெத்து வளர்க்கனும் என்று தேவி மனதில் ஆசைப்பட்டு கொண்டு இருந்தால் .....
சிவனியன் மனதிலும் கவலை இருந்தது ...என்ன செய்வது என்று புரியவில்லை ...

தேவியும் கல்யாண ஆசையை மறந்துவிட்டு தன் தங்கைகளை கவனித்து வந்தாள்.....இப்படி 10 வருடங்கள் ஓடிப்போனது ....தேவி எல்லா வேலைகளையும் செய்வாள் ....திறமை வாய்ந்த பெண், அழகிலும் சிறந்தவள் ...

ஒருநாள் தேவி தண்ணீர் தூக்கி கொண்டு வந்தாள் ..அதை ஒருவன் பார்த்து கொண்டே இருந்தான் ...

அவன் மனதில் நிறைய பேர் நல்லா இருந்தும் வேலை செய்யாம இருகாங்க ...ஆனா இந்த பொண்ணு எல்லாம் வேலையும் செய்யுதே என்று மனதில் நினைத்து கொண்டு இந்த பொண்ண கெட்டுனா உடம்பு சரி இல்லாத நம்ம அம்மாவை நன்றாக கவனிப்பாள் ....
உடனே ....
சிவனியனிடம் போய் ஐயா உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்து தாருங்கள் , நான் நன்றாக பார்த்து கொள்கிறேன் ...என்று கேட்டான்
அவரும் தேவியின் வயதை மனதில் கொண்டு சம்மதம் சொன்னார் ....

தேவியே திருமணம் செய்து இருவரும் சந்தோஷமாக வாழ்கின்றனர் .....


தேவி தன் கணவரோட தாயை , தன் தாயாகவும் ,
தன் தங்கைகளையும் , தன் அப்பாவையும் , தன் கணவனையும் பார்த்து வருகிறாள் .............


கருத்து : ஊனம் என்பது உடலில் இல்லை . மனதில்தான் இருகின்றது ..இறைவன் இன்னார்க்கு இன்னார்தான் என்று பிறக்கும் போதை முடிவு செய்துள்ளான் ...

எழுதியவர் : lakshmi (26-Dec-13, 7:56 pm)
பார்வை : 273

மேலே