சில நிமிடங்கள் சிந்தனைக்காக

சில நிமிடங்கள் சிந்தனைக்காக!!!!

கடந்தவை நிஜங்கள்
நடப்பவை யதார்த்தம்
எதிர்காலம் கனவுகள் தான்!

எதுவும் எம் கையில் இல்லை !
எதுவும் எம்மோடு இல்லை !
எதுவும் எமக்கென்று இல்லை!

பார்வை ஒன்றுதான்
ஆனால்
விழிகள் வேறுதான்

நேசிப்பதிலும் அர்த்தம் இல்லை !
யோசிப்பதிலும் அர்த்தம் இல்லை !
எல்லாம் அவரவர் விதிப்படிதான் !

மாற நினைக்கிறேன்
மாற்ற நினைக்கிறேன்
எதுவும் முடியவில்லை !

ஆனாலும்
வாழ்க்கை என்றும்
சிந்திக்கபடவேண்டியதே !!

எழுதியவர் : Anjana (27-Dec-13, 12:33 pm)
பார்வை : 206

மேலே