படிக்காத மேதைகள்

படிக்காத மேதைகள் பலர் நிறைந்த நாட்டில்
பட்டம் பெற்றும் பதர்களாய் திரிவோர் அதிகம்
பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் -
விடுதலை வீரர், மதுஅரக்கனை ஒழிக்க,
பெண்ணடிமை போக்க இறுதி மூச்சுவரை
ஓயாமல் உழைத்திட்ட மாமனிதர்.
கர்மவீரர் காமராசர் பெருந்தகையும்
பள்ளிப் படிப்பை முடிக்காது போனவர்தான்
படிக்காதோர் எங்கும் இருக்க கூடாதென்று
ஊர்தோறும் கல்விச் சாலைகளைத் திறந்து
ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவும் தந்து
உலகிற்கே வழிகாட்டிய உத்தமரானார்.
தொல்காப்பிய பூங்கா குறளோவிம்
ரோமாபுரிப் பாண்டியன் பொன்னர் சங்கர்
பாயும் புலி பண்டாரக வன்னியன்
பகுத்தறிவைப் பறை சாற்றும் எண்ணற்ற
பாடல்கள் தந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரும்
பள்ளிப் படிப்பை முடிக்காமல் விட்டவர்தான்.
இருபதாம் நூற்றாண்டின் கவிச்சக்கரவர்த்தி
முத்தையாவாக இருந்து கண்ணதாசன் ஆகி
காலத்தை வென்று நிற்கும் இனிய
பாடல்களைத் தந்த கவிமேதையும்
பள்ளிப் படிப்பை முடிக்காதவர் தான்.
மேற்சொன்ன மேதைகள் எல்லாம்
அறிவைப் பெருக்க ஆழ்ந்து படித்தவர்கள்.
நல்ல வருவாய் தரும் தொழிலுக்குச் செல்ல
இயந்திரமாய் மாறி மனித நேயமென்றால் என்ன என்பதையேதெரியாமல் மதிப்பெண்களை
வாரிக் குவிக்கும் மாணவர்கள்,
அரைகுறையாய் படித்து அனுதாப அலையில்
தேர்ச்சி பெற்று வருவோரை எல்லாம்
கற்றவர்கள் பட்ட்டியலில் சேர்க்க முடியாது.
படிக்காத மேதைகளின் அறிவுத் திறன் காட்டி
முனைவர் பட்டம் பெற்றோர் எண்ணிலடங்கார்.
அறிவுக்குப் படிப்பவர் மேதை
தேர்வுக்கு மட்டும் படிப்பவர்
தன்னையும் அறியார்
நல்ல நூல்களையும் காணார்.
அவர் காண்ப தெல்லாம்
பொருளியம் சார்ந்த வாழ்வே.
பகுத்தறிவில் பழுது பட்டோர்
கற்றும் கல்லா பதர்கள்.