ஒரு ராங் நம்பர்
தெருவில் நடந்து போய் கொண்டிருந்தாள் .நிஷா ...அவள் நம்பருக்கு ஒருகால் வந்தது ....
அதில் ஒரு பெண் குரல் உங்கள் நம்பருக்கு 30 லட்சம் அடித்து உள்ளது ..உங்கள் அக்கௌன்ட் நம்பரை தாருங்கள் என்று கேட்டாள்.....
இவளும் சந்தோஷத்தில் தன் அக்கௌன்ட் நம்பரை கொடுத்தாள்....
அதற்கு அந்த பெண் உங்கள் ரகசிய குறியீட்டு எண்ணையும் தாருங்கள் என்று கேட்டாள் ....
இவளும் கொடுத்தாள் ....
நீங்கள் திருவனந்தபுரத்தில் நான் சொல்லும் முகவரிக்கு வந்து உங்கள் பணத்தை பெற்று கொள்ளுங்கள் .....
அவளுக்கு சந்தோஷம் யாரிடமும் கேட்க முடியாது நாமே திருவந்தபுரம் போவோம் என
எண்ணிக்கொண்டு போனாள்.
திரும்பவும் அதை நம்பரிலிருந்து கால் வந்தது ...
எடுதாள்........ஹலோ மேடம் நீங்க வரும் பொழுது 4 லட்சம் கொண்டு வரவேண்டும் என்று கூறினாள்
இவளும் ஓகே என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்....
30 லட்சம் கிடைப்பதால் 4 லட்சம் போனாலும் பரவா இல்லை என்று 4 லட்சத்தை ரெடி செய்து திருவனந்தபுரம் சென்றாள்.....
அங்கே அப்பெண் கூறியதுபோல் ஒருவர் நின்றார் ...அவரிடம் இந்த 4 லட்சியத்தை கொடுத்தார் ....
அவர் இவளுக்கு ஒரு செக் கொடுத்தார் ...
அதை வாங்கி கொண்டு வங்கிக்கு வந்து பார்த்தாள்....
வங்கி அதிகாரி அது செல்லாது என்று கூறிவிட்டார் ...அப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது அவள் யாமந்து போனது தெரிந்தது........
உடனை தன் அக்கௌன்ட் நம்பர் கொடுத்தது நினைவுக்கு வந்தது உடனை தன் அக்கௌன்ட் பார்த்தாள் ......அதில் உள்ள 2 லட்சம் எடுக்க பட்டிருந்தது ......வியந்துபோய் அப்படியே உட்கார்ந்தால் ......
கருத்து : பேராசை பட்டால் இப்படிதான் ஓன்றும் இல்லாமல் போகும் . அதனால் இருக்கிறதை வைத்து நன்றாக வாழுங்கள் ...