பூங்காவில் குழந்தை

அழகிய காலை பொழுது.

பூங்காவில் ஒரு வயதான பெண்மணியும் அவருடைய மகனும் அமர்ந்திருந்தனர்.
அப்போது அங்கு ஒரு காகம் அவர்கள் அமர்திருந்த இருக்கையின் முன்னுள்ள மரத்தின் மேல் அமர்ந்திருந்தது.

அதை பார்த்த அந்த தாய் தன் மகனை அழைத்து, "அந்த மரத்தின் மேல் அமர்ந்துள்ள பறவையின் பெயர் என்ன?" என்று கேட்டாள்.
அதற்கு அந்த மகன், "அந்த பறவையின் பெயர் காகம் அம்மா.." என்று பதிலளித்தான்.

சற்று நேரம் களித்து மீண்டும் சற்று ஆச்சரியத்தோடு தன் மகனை அழைத்து அந்த மரத்தில் அமர்ந்துள்ள பறவையின் பெயர் என்ன என்று கேட்டாள்.

இம்முறை அந்த மகன் சற்று கடுப்பாகி, "காகம் தாயே..." என்றான்.

"சரி.. சரி.." என்று அமைதியானாள்.

மீண்டும் சற்று நேரங்களித்து தன் மகனை அழைத்து, "அந்த பறவையின் பெயர் என்ன?" என்று கேட்டாள்.இம்முறை தன் தாயிடம், "இது காகம் என்று கூடவா தங்களுக்கு தெரியாது.ஏன் இத்தனை முறை கேட்கின்றீர்கள்?" என்றான்.

அதற்கு அந்த தாய்,
"மகனே நீ குழந்தையாய் இருக்கும் பொழுது உன்னை இதே பூங்காவிற்கு அழைத்து வருவேன்.அப்போது இதே போல் நீயும் இப்பறவையை பார்த்து இதன் பெயர் என்ன என்று கேட்பாய்? முதல் முறை கேட்கும் பொழுது உன் கன்னத்தில் முத்தம் பதித்து இதன் பெயர் காகம் என்பேன்".

சற்று நேரம் களித்து மீண்டும் இதன் பெயர் என்ன? என்று கேட்பாய்.மீண்டும் அதேபோல் முத்தமிட்டு காகம் என்பேன்.

மீண்டும் சற்று நேரம் களித்து இதையே கேட்பாய்.நானும் உன்னை முத்தமிட்டு காகம் என்பேன்.இது தினமும் தொடரும் வேடிக்கை என்று அங்கிருந்து எழுந்து நடக்கலானாள்..

முதுமையும் ஒரு குழந்தை பருவமே என்று அப்போதுதான் அந்த மகன் தன் தவறை உணர்ந்தான்.

"தாய்மை என்றும் நிகரில்லாதது."


கேட்டதில் பிடித்தது..

எழுதியவர் : Guruprasad (27-Dec-13, 5:03 pm)
Tanglish : bungavil kuzhanthai
பார்வை : 756

மேலே