வரலாற்றை அழிக்காதே

என்ன இவ்வளவு நேரம் ஆகியும் ஒரு பஸ் கூட வரல இது என்ன ஊரோ??
" நல்ல வேலை வரும் போது taxi ல வந்தோம் இல்லைனா அவ்வளவு தான் ".... என்று நினைத்து கொண்டே ஒருவன் நின்று கொண்டிருந்தான் ........

அப்போது அந்த வழியே வந்த ஒரு சிறிய ஆம்புலன்ஸ் போன்ற வேன் அவன் அருகில் வந்து நின்றது அதில் இருந்து ஒரு வயதான பெரியவர் " தம்பி எங்க bus க்காக நிக்குறீங்கலா " என்றார் அதற்க்கு ஒருவன் " ஆமாங்க ரொம்ப நேரமா நிக்கிற இங்க bus வராதா " என்றான் " இல்லப்பா வரும் கொஞ்ச நேரம் ஆகும் ஆமா நீங்க எங்க போகணும் என்றார் " பெரியவர்.
" நான் சென்னை வரை போகணும் " என்றான் ஒருவன் அதற்க்கு பெரியவர் " நாங்க அங்க தான் போகிறோம் உங்களுக்கு ஆட்சேபன இல்லன்னா எங்க கூட வாங்க என்றார் ..

' ஆமாம் இங்க இருந்து bus ல சென்னைக்கு போறதுக்குள்ள விடிஞ்சிடும் அதனால இவங்க கூடவே போய்டுவோம் என்று மனதுக்குள் நினைத்த படியே " சரிங்கய்யா ரொம்ப நன்றி நானும் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே வேன் கதவின் அருகில் செல்ல கதவு திறந்தது அவன் உள்ளே சென்றதும் அதில் நிறைய ஆட்கள் எல்லோரும் சிறிய வயதுடையவர்கள் அவர்கள் எல்லோரையும் பார்த்தவாற காலியாக இருந்த பெரியவரின் இருக்கைக்கு அருகில் சென்று அமர்ந்தான் ..

அப்போது ..

அவன் சிறிதாக உள்ளுக்குள் உணர்ந்தான் அங்கே ஒரு சிரிப்பு சத்தம் அவன் மனதுக்குள் கேட்பதுபோல் அது வேறொன்றும் அல்ல அவன் வேனில் ஏறியபோது அனைவரின் முகத்தில் பூத்த புன்னகைதான் ...

என்னப்பா என்ன அமைதியா வர்ற என்றார் பெரியவர்..ஒன்னு இல்லீங்க ஆமா நீங்க எங்கயாவது போயிட்டு வர்றீங்களா ? ஆமாம் நாங்க சில இடங்களுக்கு போய் சில உதவிகள் செய்றது வழக்கம் இன்னைக்கு இங்க ஒரு ஆசரமத்துக்கு காலைல போனோம் இப்போ இன்னொரு இடத்துக்கு போய்க்கிட்டு இருக்கோம் அது முடிஞ்சதும் சென்னைக்கு போய்டுவோம் என்றார் பெரியவர் ..
" அது சரி அப்போ அங்க இருந்து இன்னொரு bus பிடிச்சி போகனும் போல இருக்கே என்று நினைப்பதற்குள் " நாங்க அங்கே இறங்கி விடுவோம் உங்கள டிரைவர் சென்னைல drop பண்ணிடுவார் என்றார் பெரியவர் .

அப்பாடி!!!!!
நல்லதா போச்சு இல்லைனா நடுக்காட்ல விட்டது மாதிரி ஆயிருக்கும் என்று நினைத்து கொண்டே மெல்ல கண்கள் மூட சிறிது மணி நேரம் கழித்து " சார்.....
சார்....
பெரியவர் அவனை எழுப்ப பட்டென்று கண்விழித்து பெரியவர் முகத்தை பார்த்தான் ... " நாங்க இங்க இறங்கிடுறோம் நீங்க புறப்படுங்க என்று சொன்னார்" ..பெரியவர் .
அதற்குள் ...
" ஐய்யா ஒரு நிமிடம் தண்ணி மட்டும் வாங்கிட்டு வந்துடுறேன் அப்புறம் போகலாம்" என்று ஜன்னலின் ஓரத்தில் இருந்து driver குரல் எழுப்ப ..
" சரிங்க பரவாயில்லை" என்று பதி கொடுத்தான் ஒருவன் ...

சில நேரம் கழிந்தது driver ஐ இன்னும் காணோமே என்று நினைத்தவாறே மெதுவாக வேனில் இருந்து இருங்கி அவர்கள் அனைவரும் சென்ற இடத்தின் முகப்பு வாசலை திறந்து உள்ளே சென்றான் .....

உள்ளே பெரிய பெரிய அரிகள் இருந்தன அதில் வயதானவர்கள் படுத்து கிடந்தனர் .
அந்த ஒருவன் உள்ளே வருவதை கண்ட பெரியவர் " தப்பா நினைக்காதிங்க தண்ணி உள்ள போய் எடுத்துட்டு வர வேண்டியதாபோச்சு அதனாலதான் driver இன்னும் வரவில்லை இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்" என்றார் ..
பெரியவர் சொல்வதை கேட்க்காததுபோல் கவனிக்காதபோல்
ஒருவனின்
கண்கள் அங்கே அறையில் படுத்திருந்த பெரியவர்கள் மேல் கவனம் செல்ல அவன் கால்கள் மெதுவாக உள்ளே சென்றது அப்போது பெரியவர்
" இவங்க கூடத்தான் நாங்க என்னைக்கு night full அ செலவிட போறோம் " என்றார் பெரியவர்
" இந்த ரூம்ல இருக்குறவங்க எல்லாம் யாரு சார்" என்றான் ஒருவன்
" அதுவா வயசான ஆதரவு இல்லாதவங்க என்றார் பெரியவர்"
ஒருவன் " அப்படின்னா"
பெரியவர் " அப்படின்னா வீட்ல இருந்து துரத்தபட்டவங்க , அனாதைகள் , ஆதரவ தேடி ரோட்டு ஓரங்களில் பிச்சை எடுத்தவர்கள் எப்படி பலதரப்பட்ட வயதானவர்கள்"
ஒருவன் " அவங்கள எல்லாம் ஏன் இங்க கொண்டுவது வச்சிருக்காங்க இவங்களுக்கு காசு பணமெல்லாம் செலவுக்கு யார் கொடுப்பாங்க "
பெரியவர் " இங்க எல்லாமே மத்தவங்களோட உதவிகள வெச்சுத்தான் நடத்திகிட்டு இருக்காங்க இவங்களுக்குன்னு யாரும் இல்லாத காரணத்தால் இவங்க சம்பந்தப்பட்ட யாரும் இங்க உதவி செய்றது கிடையாது "

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும் பொழுது பெரியவர்களுடன் வந்த ஒரு பெண் அங்கிருந்த வயதான ஒவ்வொருவரையும் பார்த்து பேசிக்கொண்டு வந்தால் அப்போது ஒரு வயதான பாட்டி அவளை அழைக்க அவள் அருகில் சென்று அமர்ந்தால் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென அந்த வயதான பாட்டி அந்த பெண்ணின் மீது வாந்தி எடுத்தால் ...
இதை பார்த்த ஒருவனின் முகம் சகிக்க முடியாதது போல் காட்சியளித்தது.......
அப்போது அவன் " இதெல்லாம் உங்களுக்கு தேவையா சார் " என்றான்
அப்போது பெரியவர் " ruba are your ok " என்றார்
" i am ok " என்றால் சிரித்து கொண்டே...

ஒருவனுக்கு ஒன்றும் புரியவில்லை " என்ன சார் அவங்க உடம்பெல்லாம் வாந்தி அதை கவனிக்காம அந்த வயசான பாட்டியோட உடம்ப சுத்தம் பண்றாங்க" என்றான்

அப்போது பெரியவர் " வாந்தி வர்றது மனிஷங்ககளுக்கு மட்டும் இல்ல மிருகங்களுக்கு கூட வரும் அதை நாம் ஏன் அருவருப்பா பாக்கணும்

" என்ன சார் இருந்தாலும் வயசானவங்க..
அதுவும் இல்லாம ....அவங்க யாருன்னே தெரியாது அப்படி இருக்கும் போது அவங்க இப்படி பண்ணும் போது எனக்கே ஒரு மாதிரி இருக்கு என்றான் "

பெரியவர் உடனே அவனை இன்னொரு அறைக்கு அழைத்து சென்றார் அதில் இருந்த பெரியவர்களால் இருந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை அந்த இடத்திலேயே சிறுநீர் கழித்த ஒரு வயதானவர் இடத்தை ஒரு sister சுத்தம் செய்தார் ..
பின்பு இன்னொரு அறைக்கு கொண்டு சென்றார் அங்கே ஒரு sister ஒரு பெரியவரை மடியில் வைத்து கொண்டு சாப்பாடு ஊட்டி விட்டார் ...
அப்போது பெரியவர் " தம்பி மனுஷன் தனது வாழ்க்கைல இரண்டு இடத்துல மட்டும் தான் தன்னை மத்தவங்க துணையோடு இருக்கணும்னு ஆசைப்படுறா அதுல ஒன்னு ..
குழந்தை பருவம் ..
இன்னொன்னு
முதுமை பருவம்.

இதுல குழந்தை பருவம் 80% மக்களுக்கு நல்ல படியா துவங்குது
ஆனா இந்த முதுமை பருவத்துல 25% மட்டுதான் முழுமை அடையுது ஏன்னா
இந்த இரண்டு பருவத்துல இருக்கவங்களையும் பாத்துக்குற பொறுப்பு சிந்திச்சு முடிவு எடுக்குற வயசு உள்ள மனிஷன்கிட்ட கொடுக்க படுத்து

ஆனால்

அவனால முதல் குழந்தை பருவத்த அழகா எடுத்து கொள்கிறான் அதே போல் முதுமை பருவத்தை எடுத்து கொள்வதில்லை...

இரண்டும் ஒன்றுதான் ஆனால் நாம் தவறு செய்து எண்ணங்களை மாற்றி அமைக்கிறோம் அதனால் தான் குழந்தை வாந்தி எடுத்தால் அருவருப்பாக தெரியாத நமக்கு முதியவர் வாந்தி எடுக்கும் போது அருவருப்பாக தெரிகிறது.. என்னைக்கும் ஒன்னு மட்டும் ரொம்ப முக்கியம் சார் .....
" நம்ம 10 மாசம் சுமந்து பெத்தவளுக்கும் நம்மள காவல் காத்து வெளியா நின்ன தந்தை இவங்க பாசத்தைவிட ஒரு பெரிய பாசம் அன்பு நீங்க வேற யார் கிட்டயும் போய் தேடினாலும் கிடைக்காது அப்படி பட்டவங்களுக்கு நாம கடைசி காலத்துல

பணி விடை செய்யலன்னா ...
உன்னோட கையாள அவங்கள தாங்கலன்னா ..
உன்னோட அன்பு அவங்களுக்கு கிடைக்கலன்னா ...

வேற யாரு அவங்கள தங்குவங்கன்னு நீ நினைக்கிற ?
என்று சொன்ன அடுத்த நொடியில் ஒருவன்

கண்ணில் இருந்து மல மல வென கண்ணீர் பெருக்கெடுத்தது
" ஆமாம் சார் என்ன பெத்தவங்களுக்கு கடைசி காலத்துல நாம பணி விடை செய்யலன்னா வேற யார் செய்வா ?
அவங்க தான் நம்மள இந்த உலகத்துக்கு கொண்டு வந்தவங்க அவங்களுக்கு இந்த உலகத்துல ஆதரவு இல்லன்ன நாம இந்த உலகத்துக்கு வந்ததுல அர்த்தமே இல்ல " என்று சொல்லிவிட்டு

" அய்யா எனக்கொரு உதவி செய்கிறீர்களா என்னை எங்கிருந்து அழைத்து வந்தீர்களோ அங்கேயே திரும்ப கொண்டு சென்று விட்டுவிடுகிறீர்களா? என்றான் " ஏமப்பா என்ன விஷயம் " என்றார் பெரியவர்!!!!

" இந்தக் உலகத்தில என்ன கொண்டு வந்தவங்கள இன்னைக்கு தான் அங்க இருக்கிற ஆசரமத்துல சேத்துட்டு வந்தே இனி என்னால அவங்கள பிரிஞ்சி இருக்க முடியாது இனி என்ன கஷட்டம் வந்தாலும் என்னோட பெத்தவங்கள நான் நல்ல முறையில பாது காப்பேன்.." என்று சொல்லி நான்தான் ...

உண்மை தாங்க நீங்கள் உங்கள பெத்தவங்களுக்கு பணிவிடை செய்யலன்னா இந்த உலகத்துல மத்தவங்க யாருங்க அவங்களுக்கு பணிவிடை செய்வா ? ஆசரமாதுல உக்காந்துகிட்டு letter வருமா phone வருமான்னு பெத்தவங்கள ஏங்க வெக்கிற நிலைமை மாறனும் ....
" உன் வரலாறு என்பது உன்னை பெற்றெடுத்தவர்கள் சொன்னால் தான் தெரியும்
அப்படி இருக்க உன்னை படைத்த வரலாற்றை அழிக்க நினைக்காதே அது உன் வரலாறு உண்பதை மறந்து விடாதே "
" அன்னை தந்தையை போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழு மறுப்பவர் மனிதரில்லை "

எழுதியவர் : சாமுவேல் (28-Dec-13, 5:45 am)
பார்வை : 214

மேலே