மாலை நேரத்து மயக்கம்5

"டேய் பம்பாதே வா"
இந்த முறை வண்டியை வாங்கி நான் முறுக்கினேன். அந்த வெளுத்த அழகி வாசலில் கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு ஒய்யரமாக நின்றிருந்தாள். எங்களையே பார்த்துக் கொண்டு தன் வலது கையில் அணிந்திருந்த தடிமனான பச்சை வளையலை முறுக்கி மேல் எற்றினாள். கிட்ட தட்ட முறைத்தாள். நான் எதுவும் கவனிக்காதது போல் அவளை கடந்து விட்டேன். பிரகாஷ் புலம்ப தொடங்கினான். என்ன பெண்டா இவள் . எதோ விவகாரமனவாள். அவள் வீட்டில் யாரவது பார்த்தால் என்னாயிருக்கும். இனியும் தொடர போவதில்லை, விலகிட போவதாக முடிவு செய்தேன். இதில் பிடிவாதம் கூடாதென்று நினைத்தபடி , நானும் அவனும் அறைக்கு வந்து சேர்ந்தோம்
.
சரண்யா அக்கா பக்கத்து வீடு என்பதிலிருந்து பழக்கம், எனக்கு போன் செய்திருந்தாள்.
" அக்கா சொல்லுங்கா "
" என்னடா எங்க சொந்தகார பொண்ணு பின்னாடி சுத்தறயமா " அவளுக்கே உரிய நக்கலுடன் கேட்டாள். நான் அதிர்ந்து போனேன்.
" இல்லையே அக்கா. யார் சொன்னா "
" விமலா தா, நீ எதுக்கு பாலோ பண்றனு கேட்கற , அவ அப்பாவுக்கு தெரிஞ்சா ப்ராபளம் ஆயிரும்கற "
" அய்யோ இல்லை கா "
" நீ சுத்தறக்கு வேற பொண்ணே கிடைக்கலயா. இவ ப்ரண்ட்லி கேரக்டர் தா . ஆனா பசங்க விஷயத்தில எப்புடினு தெரியல , ஒகே இனி மேல் பாலோ பண்ணதா "
" ஒகே விடுங்க "
" நல்லா சமாளிக்கற . ஒகே போனை வைக்கிறேன் "
" ம்ம்ம் "
.
சரண்யா அக்கா விற்கு என் மேல் நல்ல மரியாதை இருந்தது , நானே கெடுத்து கொண்டேன். அவள் பெயர் விமலா அப்போது தான் தெரிந்தது. விமலாவிற்கு என்னை பற்றி தெரிந்திருக்கிறது. என் வீடு பற்றியும் . என்னை பற்றி யாரிடம் சொல்ல வேண்டும் என்பதை பற்றியும்
.
இந்த விஷயத்தை வைத்து விமலாவோடு பேசினாள் என்னவென்று பட்டது. அடுத்த நாள் காலை , சரண்யா அக்காவிடம் அவளை காதலிப்பதாக சொன்னேன்.
" அப்படி வா வழிக்கு " யென கிண்டல் செய்தாள்.
" ஆனா , அவ சம்மதம் இல்லமா இந்த விஷயத்தை அவகிட்ட பேசமாட்டேன். நல்ல ப்ரண்டா இருப்பேன், அவ மொபைல் நெம்பர் கொடுங்க " என்றேன்.
சரண்யா அக்கா தொடர்ந்து மறுத்தாள்.
" எப்படியோ என்னை மாட்டிவிட போறடா நீ " என்றாள்
" அக்கா ப்ளீஸ் "
யோசித்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு தந்தாள்.
அவளுடைய பிடிவாதம் அயர்ச்சி அளித்தது. இனி நிரந்தமாய் பிரிவதாய் . . .
.
திடிரென்று அப்பாவின் நினைவு . நான் , அப்பா மற்றும் விமலா ஒரே வீட்டில் இருப்பதாகவும் , விமலா என்னோடு கிசுகிசுப்பாக சிரித்து பேசிக்கொண்டே என் அப்பாவிற்கு டீ போட்டு தருவதாக நினைவு. அப்பா இல்லை, இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அப்பாவும் அம்மாவும் ஒரே ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்தார்கள். அப்படி யொரு நாளில் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு முடிவில் ஒரு இரவில் தீராத மன அழுத்தத்தால் இறந்தார். பூர்த்தி செய்ய முடியாத இழப்பு , குடும்ப பொருளாதார வீழ்ச்சி . உறவினர்கள் கூடினர். அப்பாவை தூக்கும்போது அம்மா கதறி அழுது கொண்டே வந்து என்னை ஆரதழுவினாள். சேர்ந்து அழுது பின் விலகி அப்பாவோடு புதைக்குழிக்கு நடந்தேன். அப்பாவை புதைக்கும் வரை திரும்பி நின்றிருந்தேன். சுடம் பொறுத்தி கும்பிட்டு புதை குழியை சுற்றி வரும்போது , அழுகை வர வேகமாக வந்து என் மாமா கட்டி கொண்டு அழுதேன். அப்பா சின்ன வயதில் சில தவறுக்களுக்காக கண்டிக்கவும் , அடிக்கவும் செய்துதிருக்கிறார். பள்ளி இறுதியாண்டுகளில் கவனம் செலுத்தமால் நண்பர்களோடு சுற்றி கொண்டிருந்த போது , " படி சாமீ . உன்னை நம்பிதா நானும் குடும்பமும் " யென அன்பாக திருத்தவும் செய்துதிருக்கார். எல்லாம் நினைந்த படி அப்பா இல்லமால் நடந்தேன். அப்பா இல்லமால் சுவாசித்தேன். அப்பா இல்லமால் பசித்தது, அப்பா இல்லமால் நாட்கள் சென்றது. அப்பா இருப்பதாகவும் நம்பினேன். சண்டை போட்டு பிரிந்து பாட்டி வீட்டில் இருப்பதாகவும் , மாமா வீட்டில் நன்றாக குடிந்து விட்டு போதையில் உறங்கி கொண்டிருப்பதாகவும் நம்பினேன். அப்பா ஷிப்ஸ்ட்க்கு சென்றிருப்பதாக நம்பி வெளியே போய் சைக்கிளை பார்த்தேன், அது இருந்தது, ஏமாந்தேன். தினமும் அம்மா அழுதாள். ஒரு மாதம் கழித்து ,அம்மா இனி அழுது ஒன்றும் ஆக போவதில்லை யென இனி வரும் காலத்தை பார்க்கவேண்டும் யென திடமாகி வேலைக்கு கிளம்பினாள். இந்த வருடம் படிப்பை நல்ல படிக்கனும் , நல்ல வேலைக்கு போகனும் மாமா அறிவுறுத்தினார். செமஸ்டர் பீஸை அவரே கட்டுவதாக சொன்னார். நாட்கள் கடந்தது. கல்லூரி முடிந்தது, அரியர் வைக்க வில்லை. வேலையை பிடிக்கும் படலம் தொடங்கியது. கல்லூரி வாய்ப்பு அளித்த நேர்முகதேர்வுகளில் ஆங்கிலம் தெரியாத தடுமாற்றத்தால் தோற்றேன். ஆங்கிலம் கசந்தது. மனக்கஷ்டம் எற்பட்டது. ஒரு மாதம் கழித்து தெரிந்த ஒரு நண்பனால் , சின்ன கம்பெனியில் export supervisor வேலை கிடைத்தது. நல்ல வேலை , தொடக்கத்தில் 6000 யும் 6 மாதம் கழித்து 8000 சம்பளம் கிடைத்தது. போதுமானதாக இருந்தது. வேலைக்கு வேண்டி அப்பா சேமிப்பிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து yamaha rx பைக் எடுத்தேன். பிரகாஷ் பழக்கமானான், திரும்ப ஊர் சுற்ற தொடங்கினேன். பிறகு கொஞ்ச நாட்களிலே விமலா என் வாழ்க்கையில் வந்து சேர்ந்து கொண்டாள்.
-தொடரும்
part-6

எழுதியவர் : m.palani samy (28-Dec-13, 3:11 pm)
பார்வை : 215

மேலே